Tuesday, August 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.08.2022

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள்:
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

பழமொழி :

A stich in time saves nine.

விரிசலைச் சரி செய்துவிட்டால் உடைவது தப்பும். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!

பொது அறிவு :

1.இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது ? 

 பெங்களூர்

 2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

 கங்கை.

English words & meanings :

Xe-no-pho-bia - a fear or hatred of foreign people and cultures.. Noun. அந்நியர்கள் குறித்து அச்சம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :




தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.

NMMS Q 47:

12 ÷ 4 = 8 ; 9 ÷ 4 = 5 ; 7 ÷ 5 = 2 எனில் ÷ என்ற குறியீட்டின் அர்த்தம் என்ன?

 விடை: கழித்தல்

நீதிக்கதை

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

24.08.22

* செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை ஆகஸ்டு-27 அன்று பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

*நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

*ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - சுகாதாரத் துறை தகவல்.

*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை கொடுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா, ரஷ்யாவை இடித்துரைத்த இந்தியா.

*ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி.

*உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி.

*2023 உலகக் கோப்பை ஹாக்கி : மிகப்பெரிய அளவில் போட்டியை நடத்த தயாராகும் ஒடிசா அரசு.

Today's Headlines

*The Tamil Nadu government has announced that schools in 4 districts of Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu will function on Saturday, August 27 to compensate for the holiday on July 28 for the Chess Olympiad.

 *Tamil Nadu has achieved a record in paddy production and cultivation area after last 20 years.

* The government has announced raising the annual income ceiling to Rs 3 lakh to benefit from the Adi Dravida Tribal People's Economic Development Scheme.

* 96.20% of people above 18 years of age in Tamil Nadu have received the first dose of vaccine - Health Department data.

* Farmers protested again in Delhi yesterday, demanding nine-point demand, including the proper implementation of Minimum Support Price (MSP) for agricultural product.  This caused a heavy traffic jam.

 *Respect sovereignty, territorial integrity: UN  India slams China, Russia in Security Council meeting

 *ICC publishes ODI Rankings:  Indian team at 3rd place

* World Badminton Championship: Lakshya Sen wins first round

* 2023 Hockey World Cup: Odisha government is gearing up to host the tournament on a grand scale.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment