திருக்குறள் :
பால் : பொருட்பால்
அதிகாரம் : மானம்
குறள் : 962.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
பேராண்மை வேண்டு பவர்.
பொருள்: புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
பழமொழி :
You may know by a handful of the whole sack
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. உடல் வருத்தாமல் வந்த பொருள் நெடுநாள் நிலைக்காது. உடல் வருத்தியே பொருள் பெற்றுக் கொள்வேன்.
2. நேர்மையான முறையில் வந்த பொருள் கொஞ்சம் என்றாலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும். நேர்மையான முறையிலே எல்லா பொருளும் பெற்றுக் கொள்வேன்.
பொன்மொழி :
தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்
பொது அறிவு :
1.சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
கௌதம புத்தர்.
2.அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?
கம்போடியா
English words & meanings :
valiant - full of courage and not afraid., மனத் துணிவு மிக்க அச்சமற்ற,
vouch - confirm that something is true, ஒரு காரியம் சரி என்று உறுதி கூறுதல்
ஆரோக்ய வாழ்வு :
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.
கணினி யுகம் :
Shift + H - Add rhomb.
Shift + T - Add text
மே 04
பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்
பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.
நீதிக்கதை
மூன்று புதிர்!
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான்.
பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.
வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.
மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.
மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு.
பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.
மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார்.
நீதி :
அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.
இன்றைய செய்திகள்
04.05.22
★10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: செல்போனுக்கு தடை, தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு.
★சென்னையில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிகளுக்காக 133 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதற்குப் பதிலாக 1,596 மரங்கள் நட கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
★விடுமுறைக்கு பின் இன்று சட்டப்பேரவைக் கூட்டம்: மானியக் கோரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை.
★பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதம்; தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்த கூடாது: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
★உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு : ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்றுமதியாளர் குழு உடனடி பயணம்.
★உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரகசிய ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ரஷியா.
★மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி - பழனி மாணவர்கள் சாதனை.
★உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்.
★செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிப்பு.
Today's Headlines
★ 10th, 11th, 12th class general examination: ban on cell phones, the release of examination control room numbers.
★ Lighthouse in Chennai - 133 trees to be cut down for Poonthamallee Metro Railworks. The Coastal Regulatory Commission has ordered the planting of 1,596 trees instead.
★ Meeting of the Legislature today after the holiday: Chief Minister's consultation on the grant request.
★ Refusal to allow in public places is illegal; Do not force vaccination: Supreme Court orders state governments.
★ Russia decides to import many products from India, including food and chemicals: Immediate expedition of the Exporters Group to sign the agreement.
★ Russia launches a secret military satellite amid the war with Ukraine.
★ State Level Ball Badminton Tournament - Palani Students Achieved
★ World Junior Weightlifting Championship: Gold for Indian Athlete.
★ Announcement of Indian teams for the Chess Olympiad.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment