திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
குறள் : 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
பொருள்:
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்
பழமொழி :
A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிக பேச்சு என்னை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவே அதிகம் பேசாத படி பார்த்துக் கொள்வேன்.
2. பொறுமை பெருமை தரும் எனவே எப்போதும் பொறுமையாக இருக்க முயல்வேன்.
பொன்மொழி :
பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.____ரமண மகரிஷி
பொது அறிவு :
1. உலகில் முதன்முதலாக பிளாஸ்டிக் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1862.
2. உலகில் எந்த இடத்தில் முதன்முதலாக பிளாஸ்டிக் அறிமுகப்படுத்தப்பட்டது?
லண்டன்.
English words & meanings :
Gaity - festivity, களியாட்டம்,
gaily - merrily, மகிழ்ச்சி, களிப்பு
ஆரோக்ய வாழ்வு :
சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகம் கொண்டது. இரண்டு spoon சுக்குத்தூளுடன், ஒரு tumbler தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் மூட்டில் ஏற்படும் வழி குணமாகும். சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் விட்டு கசாயம் செய்து பருகிவர கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம் பட்டை போட்டு கசாயம் செய்து குடித்து வர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும். தலைவலி மற்றும் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைய உதவுகிறது.
கணினி யுகம் :
Ctrl + Z - Undo last action.
Ctrl + G - Find and replace options
ஏப்ரல் 12
நெ. து. சுந்தரவடிவேலு
பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[3] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [4] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.
நீதிக்கதை
ஒரு மூதாட்டியின் கதை
வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.
ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிறமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை எனக் கூற விரும்பினாள்.
கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில் இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு எனக் கேட்டார்.
அம்மூதாட்டி அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன் என்று கூறினார்.
அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்? என்றாள் அம்மூதாட்டி.
ஆமாம்... அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன் என்றார்.
ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன் என்று கூறினாள்.
அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.
பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது.
அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு என்றான்.
மூதாட்டி நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன் என்று கூறினாள்.
ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள்.
அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்? என்றான்.
நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ! என்று சொன்னாள்.
அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன் என்றான் வழிப்போக்கன்.
உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள்.
வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டிக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார்.
விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன் என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.
அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு என்று தீர்ப்பு வழங்கினார்.
சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!
இன்றைய செய்திகள்
12.04.22
மாநில வன உயிரின பாதுகாப்பு குழு திருத்தி அமைப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு
குழுவில் வனத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு, 15 - புனித வெள்ளி ஆகிய தொடர் அரசு விடுமுறை நாட்களை தொடர்ந்து ஏப்ரல் 16 - சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை.
ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள் (Smart Class Room), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், செம்மைப் பள்ளிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் அருகே சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் மற்றும் சோழர்கால 'சாசனக்கல்' கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 7,441 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது.
தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்.
மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி.
Today's Headlines
State Wildlife Conservation Committee Editing System Committee structure is headed by Chief Minister MK Stalin. The committee includes the Minister of Forests, legislators, and forest officials.
14 April 14 - Tamil New Year, 15 - Good Friday Following the public holidays, April 16 - Saturday is also a school holiday.
Announcements have been made during the debate on the School Education Department grant request in the Tamil Nadu Legislative Assembly with features including Rs. 150 crores for 7,500 Smart Class Rooms, high-tech computer labs, English language laboratories, and refined schools.
Near Tirupati, about 3,000 years old cobblestones and Chola 'charcoal' have been found.
The Minister of Social Welfare said in the Assembly that there are 54,439 Anganwadi Centers functioning in Tamil Nadu, out of which 7,441 Anganwadi Centers operating in private buildings are operating in their own buildings.
Shebaz Sharif was elected as the new Prime Minister of Pakistan
With the severe economic crisis in Sri Lanka, the influx of refugees from there to Tamil Nadu has increased.
National Basketball Tournament: Tamil Nadu team champion.
ICC announces monthly Cricketer of the Year award
Prepared by
Covai women ICT_போதிமரம்
பயனுள்ள வகையில் உள்ளது... நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDelete