Wednesday, February 2, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.02.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைச்செருக்கு
குறள் எண் : 773
குறள்:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

பொருள்:
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

பழமொழி :

Ask and it shall be given


அழுத குழந்தை பசியாரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். ------- காமராசர்

பொது அறிவு :

1. இந்தியா அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளை முதல் முறையாக எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது? 

பிலிப்பைன்ஸ். 

2 . மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? 

வி. அனந்த நாகேஸ்வரன்.

English words & meanings :

Delicious - very tasty, மிகவும் ருசியான,

 exhausted - very tired, மிக்க களைப்பாக 

ஆரோக்ய வாழ்வு :

பீட்ரூட் மூளையை சுறுசுறுப்பாக்கும். ரத்தசோகையை குணமாக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும். செரிமான பாதையை ஆரோக்கியம். இதய நோய்கள் வராமல் தடுக்கும். எலும்பு மெலிதல் நோயைத் தடுக்கும்.




கணினி யுகம் :

Ctrl + Alt + 9 - Next term.

 Ctrl + F7 - Next view

பிப்ரவரி 3

எச். ஏ. கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்

கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 231827 - பெப்ரவரி 31900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். இவரைக் கிறித்துவக் கம்பர் எனப் புகழ்வர்.

நீதிக்கதை

மனசாட்சி

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜாடியில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜாடியில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜாடியில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜாடியில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

நீதி :
நேர்மறை எண்ணம் உங்களை வாழ வைக்கும். எதிர்மறை எண்ணம் உங்களை அழிக்கும்.

இன்றைய செய்திகள்

03.02.22

★காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

★கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கோரிய வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

★குறையும் கரோனா தொற்று- இந்தியாவின் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 9.26% ஆக சரிவு: மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியீடு.

★அதிவேகமாகப் பரவும் உருமாறிய ஒமைக்ரான் 57 நாடுகளில் கண்டுபிடிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்.

★ஜூனியர் உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து.

★விளையாட்டு உலகில் சிறப்புமிக்க விருதுகளில் ஒன்றான 'லாரஸ்' விருதுக்கு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

 
★ The Tamil Nadu Uniformed Personnel Selection Board has announced that  Tamil qualifying examination is compulsory for the Police Selection qualifying examination.

 ★ The Chennai High Court has dismissed a case seeking an injunction restraining the conduction of college semester exams online.

 ★ Decreasing Corona Infection- India's Daily Positivity Rate Decreases to 9.26%: Federal Ministry of Health Report Release.

 ★ Discovery of the fastest-spreading Omicron in 57 countries: World Health Organization data.

 ★ Junior World Cup: England qualifies for the final.

 ★ Athlete Neeraj Chopra, who won a gold medal for India at the Olympics, has been nominated for one of the prestigious 'Laurus' awards in the world of sports.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment