Monday, January 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.01.22

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 737

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

பொருள்:
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்

பழமொழி :

A clean hand wants no washing


பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

வாழ்க்கையில் சேமிப்பை
ஒரு போதும் அலட்சியம்
செய்யாதீர்கள் சேமிப்பை
அலட்சியம் செய்பவர்கள்
தன் வாழ் நாளில் ஒரு
போதும் செழிப்பை
அடைய முடியாது.___ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :

1. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த உதவி எண் எது? 

139. 

2. குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.

English words & meanings :

complement - a thing that goes together well with something else. வேறொன்றுடன் நன்றாக பொருந்தும் பொருள். 

Compliment - a statement or action that shows admiration. பாராட்டு

ஆரோக்ய வாழ்வு :


ஆரோக்கிய வாழ்வு

*தேனின் நன்மைகள்*

1)மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் ஊறும்.


2) தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் , வாய்ப்புண் குணமாகும்.

கணினி யுகம் :

F 12 - Activate Editor. 

Ctrl + ' - Acute accent

ஜனவரி 04


லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்



லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.


உலக பிரெயில் நாள்




புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

நீதிக்கதை

சிறந்தவர் யார் ?

ஒரு நாட்டின் மன்னன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சரிடம் ஆலோசிக்க வந்தான். அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.

நாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார். மன்னர் குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.

இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள் என்றார். மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விவரிக்கலானார்.

என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர். இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார். மங்கலான இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச தூரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார். அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே, அவர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.

பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச தூரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.

இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச தூரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார் என்றார். அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய் தாழ்ந்த குரலில், கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது என்றான். அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை என்றான். 

அமைச்சரும், கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்? என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார். தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன் என்றான். அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையே மன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.

நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள்

04.01.22

◆10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

◆கரோனாவைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

◆முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் நேற்று தொடங்கியது.

◆15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது. 

◆மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலி்ந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10%இடஒதுக்கீட்டுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயித்தது நியாயமானதுதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை - ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.

◆ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை.

◆இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.

◆இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான  தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.


Today's Headlines

 🌸 School Education Minister Anbil Magesh has said that there will be a direct Public examination for 10th and 12th class students.

 🌸Health Secretary Radhakrishnan has directed district collectors and corporation commissioners to impose fines on those who do not wear masks to control corona.

  🌸Counseling for postgraduate engineering courses started online yesterday.

 🌸Vaccination work has started for 15- to 18-year-olds  across the country yesterday.

  🌸The Central Government has said in the Supreme Court that it is reasonable to set a maximum annual family income limit of Rs 8 lakh for the 10% reservation for the economically disadvantaged forward caste in medical studies.

  🌸Those who have not been vaccinated with booster dose are barred from traveling abroad - UAE order.

 🌸ISL  Football: Chennai defeated Jamshedpur.

 -🌸2nd Test between India and South Africa: Started yesterday in Johannesburg.

 🌸 South African team announces one-day cricket match against India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment