திருக்குறள்
அதிகாரம்:கள்ளாமை
திருக்குறள்:282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
விளக்கம்:
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.
பழமொழி
He who sows thorns will never reap grapes.
விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.
2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்
பொன்மொழி
அறிவியல் என்பது தோல்வியில் கிடைக்கும் புதிய பாடம் , மீண்டும் மீண்டும் சிந்தனையை தூண்டும் செயலியாகும் ..
டாக்டர். சிவன்
பொது அறிவு
* பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் என்ன?
இம்பீரியல் வங்கி
* பிளவு பள்ளதாக்கில் பாயும் நதி எது?
தப்தி
English words & meanings
1. Radiation - a type of dangerous and powerful energy
கதிர் வீச்சு - இது ஆற்றல் மிக்கது கண்ணுக்குத் தெரியாதது சில நேரங்களில் ஆபத்தானது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது.
2.Range : open land that farm animals use for grazing
பண்ணை விலங்குகள் மேயும் பறந்த திறந்த வெளி நிலம்.
ஆரோக்ய வாழ்வு
பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதை சமையலில் சேர்ப்பதால் நரம்புகளையும் ,மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
Some important abbreviations for students
* NO = Norway
* NP = Nepal
நீதிக்கதை
ஆசை
விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.
ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.
நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
இன்றைய செய்திகள்
18.09.2019
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளது.
* 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
* ஆசிய ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
* சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா மரின் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.
Today's Headlines
🌸The Central Government has canceled the jewellery loan for agriculture in the nationalized banks without warning .
🌸 Regarding 5th and 8th public examination the present situation will continue for three more years, said the Minister of School Education, K A Sengottaiyan.
🌸Indian team qualified for the quarter-finals of the Asian Men's Volleyball Championship in Olympics.
🌸In the men's 69 kg weight category of the World Boxing Championship's 2nd round, Indian boxer Duryodhan Singh Neji lost by 1-4.
🌸 Carolina Marin advanced to 2nd round in China Open Badminton.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment