திருக்குறள்
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
விளக்கம்:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
பழமொழி
DO GOOD TO THOSE WHO HARM YOU
பகைவனையும் நேசித்து பார்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நமக்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் குறித்து அறிந்து கொள்ள முயல்வேன்.
2.அவர்களின் தியாகம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை போலவே நானும் வாழ முயற்சி செய்வேன்.
பொன்மொழி
உண்மையில் மனம் அமைதி பெறுகிறது எனில் அங்கு ஓர் ஆன்ம இசை ஒலிக்கக் கேட்கலாம் ... மனம் இசைக்கு அடிமையாகும் போது மனிதம் தழைக்கிறது.
----- அப்துல் கலாம்
பொது அறிவு
* சுதந்திர தினத்தன்று இந்திய படைவீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் யாவை?
போர்கால வீரதீர விருது:
பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா
அமைதிகால வீரதீர விருது :
அசோக சக்ரா , கீர்த்தி சக்ரா , செளரியா சக்ரா
* ஆகஸ்ட் - 15 ஆம் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் மற்ற நாடுகள் எவை?
தென்கொரியா , காங்கோ , பஹ்ரைன்
English words & meanings
Umbrella bird - a bird which has umbrella like crest at it's top.
வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க காடுகளில் வாழும் குடை பறவை.
இதன் தலையில் காணப்படும் கொண்டையை குடை போல விரிக்கும்.
அழியும் நிலையில் உள்ள பறவை.
ஆரோக்ய வாழ்வு
நாவல் மரத்தின் பழம் ,இலை ,மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும் .
Some important abbreviations for students
UNI. - United News of
India
UTI. - Unit Trust of India
நீதிக்கதை
நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.
அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.
நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.
அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ்.
இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.
இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.
பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.
மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.
தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.
என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.
கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.
நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.
பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள்.
இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.
இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.
இன்றைய செய்திகள்
15.08.2019
* இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
* தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
* புதுபொலிவு பெறும் கல்லணை: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை (காவிரியை) வரவேற்கும் விதமாக, தஞ்சை மாவட்டம் கல்லணையில் வர்ணம் பூசும் பணி நடைப்பெற்று வருகிறது.
* சர்வதேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு நடத்திய உலக கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் ஐஸ்வர்யா.
* முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி. உஷா ஆசிய தடகள சங்கத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Today's Headlines
🇮🇳 Today the 73rd Independence Day is celebrating all over the country.
🇮🇳The Teacher Selection Board has decided to recruit lecturers in Government and Government aided polytechnic colleges in Tamil Nadu.
🇮🇳 The thanjavur district is working on painting the Kallanai dam to welcome the cauveri water opened from mettur.
🇮🇳 Aishwarya became the first Indian woman to win the champions trophy at the world cup series organized by the International Motorcycle Federation.
🇮🇳 Former Athleter Pt. Usha has been appointed as a member of the Asian Athletic Association.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment