Wednesday, December 19, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.12.18

திருக்குறள்


அதிகாரம்:
அடக்கம் உடைமை

திருக்குறள்:124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

பழமொழி

As is the king; so are his subjects

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி

இரண்டொழுக்க பண்புகள்

* என் தேர்வுக்கான பாடங்களை நல்ல முறையில் படித்திடுவேன்.

* நான் என் தேர்வுகளை நேர்மையான முறையில் எழுதிடுவேன்.

பொன்மொழி

பாலைக் காய்ச்சினாலும் சுவை குறைவதில்லை. அதுபோல, நல்லவர்கள் வறுமையிலும் நேர்மை இழப்பதில்லை.

    - ஔவையார்

  பொது அறிவு

1. இந்தியாவின் நீண்ட கடற்கரையுடன் கூடிய மாநிலம் எது?

 குஜராத்

2. தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் எது?

 தொட்டபெட்டா


தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சாத்துக்குடி



1. சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

2. இரைப்பைக் கோளாறுகளான அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவற்றை சரிசெய்ய சாத்துக்குடி உதவும்.
⭕இதற்கு குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் திறன் உள்ளது.
⭕இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் ஏற்படும். ⭕நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.

English words and Meaning

Inspection. ஆய்வு
Joist.           உத்திரம்
Jumble.      குழப்பம்
Kick.            உதைத்தல்
Kiln.     சூளை, காளவாய்

அறிவியல் விந்தைகள்

* அசிடஸ் என்ற இலத்தின் மொழி சொல்லுக்கு புளிப்பு என்று பொருள்.

* வைரஸ் என்ற இலத்தின் மொழி சொல்லுக்கு நஞ்சு என்று பொருள்.

* அடாமஸ் என்ற  லத்தின் சொல்லுக்கு பிரிக்க முடியாத என்று பொருள்.

* செல் என்ற லத்தின் சொல்லுக்கு சிறிய அறை என்று பொருள்.

நீதிக்கதை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.


பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.

பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.

மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

“நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா.

“நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான்.

வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.

பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,

“உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.

முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.

“ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?”

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.

“நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”

“உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம்.    பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்

இன்றைய செய்திகள்

20.12.2018

* இந்திய விமானப்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிசாட்- 7ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

* பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் பேனர் வைக்கத் தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

* வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது மொபைல் போன் சேவை பெறுவதற்கோ ஆதாரை மட்டும் முக்கிய ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Today's Headlines

🌹 GSAT-7A  satellites designed specifically for Indian Air Force and was successfully launched yesterday.

🌹 The petition requested to the Supreme Court to dismiss the order by the Government of Tamil Nadu on plastic barriers.

 🌹The Supreme Court has banned the action of keeping the banner which creates inconvenience to public and motorist

🌹 The central government has announced a penalty of Rs.1 crore for asking Aadhar  number alone as an important document for the bank account or a source of a mobile phone service.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment