1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.
2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
நேற்று என்பது முடிந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவேயில்லை. நம்மிடம் இருப்பது இன்று மட்டுமே. நற்செயல்களை இப்போதே தொடங்குவோம்.- அன்னை தெரசா
பொது அறிவு :
"01.நவீன அறிவியலின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?
கலிலியோ கலிலி
Galileo Galilei
02.தமிழ்நாட்டில் முத்து தொழில் அல்லது முத்துக் குளித்தல் அதிகம் நடைபெறும் இடம் எது?
தூத்துக்குடி Thoothukudi
English words :
Meticulous – showing great attention to detail.ஒவ்வொரு விவரத்திலும் மிகுந்த கவனத்துடன் இருத்தல்
Articulate – Fluent or persuasive in speaking or writing. தெளிவாக உச்சரித்தல் அல்லது எழுதுதல்
தமிழ் இலக்கணம்:
இன்று 400 எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்
1. உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன்
2. உனக்கு *_நாநூறு_* ரூபாய் கொடுத்தேன்
இதில் எது சரி?
பிரித்து எழுதி பார்ப்போம்
நானூறு –நான்கு + நூறு
நாநூறு – நான்+ நூறு
உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன் என்பதே சரி
அறிவியல் களஞ்சியம் :
மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம்.
ஜனவரி 08
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
நீதிக்கதை
தாய் சொல் தட்டாதே
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.
குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.
"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….
எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..
ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.
வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.
இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.
தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.
இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.
தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.
"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.
‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?
"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.
இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.
இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.
தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.
அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.
இன்றைய செய்திகள்
08.01.2026
⭐டெல்லியில் காற்று மாசினை தடுக்க தவறியதற்காக காற்றுதர மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
⭐ 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் இந்தியா, நமது அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
⭐பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் 12-ந் தேதி விண்ணில் பாய்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.
Today's Headlines
⭐The Supreme Court has slammed the Air Quality Management Authority for failing to curb air pollution in Delhi.
⭐ India has emerged as the world's largest rice producer, surpassing our neighboring country China, with a rice production of 150.18 million tonnes.
⭐PSLV-C62 rocket to launch on 12th. 17 satellites of research institutes are also planned to be launched by the rocket.
*SPORTS NEWS*
🏀The Women's T20 Cricket World Cup is set to be held in England and Wales. 10 teams will participate in this series and will compete in a series of matches, also 6 teams have already qualified. 4 teams are yet to be selected.