Sunday, July 31, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.


பொருள்:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

பழமொழி :

Dogs that pursue many hares kill none.

பல பறவைகளுக்கு குறி வைப்பவர் ஒன்றையும் வீழ்த்த மாட்டார்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

வலிமை இல்லாதவர்கள்
அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை
வைக்கிறார்கள்.. வலிமை
உள்ளவர்கள் தன் மீது
நம்பிக்கை வைக்கிறார்கள்..!

பொது அறிவு :

1.புரோட்டீனின் முக்கிய பொருள் எது ? 

அமினோ ஆசிட். 

2. நியூரான் என்றால் என்ன ? 

நரம்பு செல்.

English words & meanings :

identification - I ·den·ti·fi·ca·tion - the act of finding out who someone is or what something is. Noun. அடையாளம் குறி அல்லது அடையாளம் காணுதல். பெயர் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சிறுநீரக செயல்பாடு மேம்பட அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினசரி தண்ணீரின் அளவு ஆண்களுக்கு 4 லிட்டர் மற்றும் பெண்களுக்கு 3.1 லிட்டர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

NMMS Q 36:

ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் _________ ஆண்டுகளில் மூன்று மடங்காகும்.

 விடை: 25 ஆண்டுகள்

ஆகஸ்ட்  01


பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்





பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilakமராத்திबाळ गंगाधर टिळकபாள கங்காதர டிளக்சூலை 231856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

நூலும் பட்டமும்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே! 

அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்

இன்றைய செய்திகள்

01.08.22

 💫வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு.

 💫தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

 💫சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 💫ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்.

 💫ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்.

 💫சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 💫காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 💫செஸ் ஒலிம்பியாட்: 3-வது சுற்றில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.

 💫காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 💫Weather Forecast: Chance of sudden downpour in 5 districts: Chennai Meteorological Department Notification.

  💫There is no incidence of monkey measles in Tamil Nadu: Minister M. Subramanian informed.

  💫Various schemes for education development have been approved in the Chennai Municipal Council meeting.

  💫India ranks 3rd in the list of countries that spend the most on the military.

  💫Prime Minister's foundation for green energy projects worth Rs.5,200 crore - Solar panel-related website also launched.

  💫 A historic resolution has been passed in the UN General Assembly that living in a clean environment is a fundamental right.

 💫 India's Pindyarani Devi Sorokaipam won a silver medal in the 55 kg weightlifting category at the Commonwealth Games.

💫Chess Olympiad: Indian player Raunak Sathwani wins the 3rd round.

💫 Commonwealth Table Tennis Tournament: Indian men's team advances to semi-finals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, July 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2022

     திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பொருள்:

நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

பழமொழி :

A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 

2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

நம்பிக்கையை இழந்து எல்லாம்
முடிந்துவிட்டது என்று
எண்ணாமல் இது முடிவு
இல்லை.. ஒரு சிறிய வளைவு
தான் என்றெண்ணி நாம்
முன்னேற வேண்டும்..!


பொது அறிவு :

1.மலேரியா என்பதன் பொருள் என்ன ? 

சுத்தமற்ற காற்று.

 2.மனித உடலின் வேதி சோதனை சாலை எனப்படும் பாகம் எது? 

ஈரல்.

English words & meanings :


ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.

NMMS Q 35:

உராய்வு விசை எப்பொழுதும், பொருள் இயங்கும் திசைக்கு _________செயல்படும். 

விடை: எதிர் திசையில்

ஜூலை 29


வின்சென்ட் வில்லியம் வான் கோ



வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (About this soundகேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் முடிந்தது.


பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.[3

நீதிக்கதை

மரவெட்டியின் வேண்டுதல்

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான். வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான். மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான். 

உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான். விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான். பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.

இன்றைய செய்திகள்

29.07.22

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: சங்க காலம் முதல் சமகாலம் வரை - அனைவரையும் வியக்கவைத்த நிகழ்த்துக் கலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள்.

பள்ளியின் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் நிறுவனங்கள் ஆகஸ்ட்10-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.

72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.

இத்தாலி நாட்டில் நடந்து வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

Chess Olympiad Inauguration: Sangam to Contemporary - Spectacular performance and variety.

 Parents responsible for students damaging school property: Education Department notice

 Monkey Measles Testing Laboratory in Chennai: Minister M. Subramanian inaugurated.

 Amidst the spread of monkey measles in India, the central government has announced that companies wishing to find a vaccine for this disease should submit their interest by August 10.

 North Korea is fully prepared to launch a nuclear attack against the United States, its leader Kim Jong Un has said.

 The Commonwealth Games in which 72 countries are participating started yesterday in England.

 The Indian athlete has created a historic record by winning gold at the ongoing World Under-17 Wrestling Championship in Italy.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, July 27, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

பொருள்:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்

பழமொழி :

A diamond is valuable, though it lies on a dunghill.
குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குறையுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 

2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால் ஒருவரின்
ஏமாற்றத்திற்கு முக்கிய
காரணமும் இந்த
நம்பிக்கை தான்..!

பொது அறிவு :

1.அதிக ஞாபக சக்தி உள்ள விலங்கு எது? 

யானை. 

2. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? 

அண்டார்டிகா.

English words & meanings :

grat·i·fy - to please or satisfy one's desire, verb. திருப்திப்படுத்த, வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.

NMMS Q 34:

ஒளி உமிழ் டையோடு என்பது _________பொருட்களால் செய்யப்பட்டது. 

விடை: குறை கடத்தி

ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்





உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.07.22

★செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் மருத்துவ சேவை வழங்க 30 ஆம்புலன்ஸ் மற்றும் 1000 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

★தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

★காய்ச்சல், இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை என  மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது - அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

★பிலிப்பைன்ஸில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

★2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

★செஸ் ஒலிம்பியாட் போட்டி: 6 அணிகளை களம் இறக்கும் இந்தியா.

★காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Today's Headlines

🌸 At the place of chess Olympiad for medical assistance, 30 ambulances and 1000 medical assistants are in preparedness - health minister
to implement the breakfast scheme in schools government released GO today
🌸 26 types of medicines are in very poor standard which is prescribed for the fever and heart disease - declaration by the medicine control board
🌸 The bidding for the 5G wave has been started by this the government may gain 4.3 lakhs crore rupees.
🌸Due to the earthquake which occurred in the Philippines yesterday morning 4 people died due to a building crash
🌸Russia says after 2024 they will come out of the International Space Centre and will set up a separate Space Centre for them
🌸 In Chess, Olympiad India rules down 6 teams
🌸 At Common Wealth Games' inauguration player P. V. Sindhu was selected as the one who holds the flag during the procession
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, July 26, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள்:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

பழமொழி :

A cursed cow has short horns.
இறைவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.

 2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

கல்வி என்பது ஒரு மூட்டை
நூல்களை வாசிப்பது அல்ல..
அடக்கம்.. ஒழுங்கு.. அறம்.. நீதி..
இவற்றின் முன்மாதிரி ஆகும்.

பொது அறிவு :

1.அறிவைக் குறிக்க வழங்கும் பட்சி எது ? 

ஆந்தை. 

2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 

எட்டாயிரம் லிட்டர்.

English words & meanings :

fe·lic·i·ta·tion - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க கொத்தமல்லி உதவுகிறது

NMMS Q 33:

பற்களை வலிமையாக வைத்திருக்கப் பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு எது? 

விடை: ஃபுளூரின்

ஜூலை 27


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்



ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalamஅக்டோபர் 151931 - ஜூலை 272015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின்மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.[


சாலிம் அலி அவர்களின் நினைவுநாள்




சாலிம் அலி (சலீம் அலி) (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சாலிம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சாலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

நீதிக்கதை

சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை

ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். 

பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. 

ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது. 

ஏன் சிரிக்கிறாய்? 

அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை. 

காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை. 

பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார். 

பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை. 

நீதி :
சோம்பேறியாக இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

27.07.22

தமிழகத்தில் 3 இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிப்பு.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின.

இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம்... ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

24 ஆண்டு கால கனவு பலிக்குமா! காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களம்காணும் இந்திய ஹாக்கி அணி.

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி.

Today's Headlines

 Notification of 3 places in Tamil Nadu as Wetlands of International Importance.

 A five-layer security arrangement has been made in Chennai with 22,000 police officers and inspectors ahead of Prime Minister Modi's visit to attend the opening ceremony of the Chess Olympiad.

 No more Eucalyptus trees should be planted in Tamil Nadu: Madras High Court orders.

 Wildfires are spreading uncontrollably in the state of Texas, USA.  As the forest fire spread to the residential areas, the residences were engulfed in flames.

 Peak heat in the UK... Rivers, ponds at risk of drying up: Ministry of Environment warns.

Sweden's Armand sets a new record to win gold in the pole vault at the World Athletics Championships.

 Will the 24-year dream come true?  The Indian hockey team is aiming to win gold in the Commonwealth Games.

 ISL Football: Jamshedpur retains Jitendra Singh.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்