Pages

Wednesday, February 23, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 812

குறள்:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

பொருள்:
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?

பழமொழி :

The leopard cannot change its spots.


எட்டிக்கு பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

தன்னம்பிக்கை என்பது
ஒரு நாளில் உதிர்ந்து விடும்
பூவாக இருக்க கூடாது
ஒவ்வொரு நாளும் பூக்கும்
செடியாக இருக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. அனைத்து மகளிருக்கான ரயில் நிலையம் எங்குள்ளது? 

மும்பை (Matunga railway station) 

2. சென்னையில் அனைத்து மகளிருக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி எது?

 RBL வங்கி.

English words & meanings :

biting one's head off - very angry, கோபத்தில் மற்றவர்களை திட்டுவது,

looked puzzled - looked confused, குழப்பமான நிலைமை

ஆரோக்ய வாழ்வு :

நஇலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. விட்டமின் ஏ, விட்டமின் சி ,கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை. அதோடு டயட்ரி ஃபைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்த பழம் இது. இதில் கிட்டத்தட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மன அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும்.

கணினி யுகம் :

Alt + Enter - Open properties window of selected icon or program. 

 Shift + F10 - Simulate right-click on selected item.

பிப்ரவரி 24


ஸ்டீவ் ஜொப்ஸ்




ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 241955- அக்டோபர் 5, 2011ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.[12] 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.[

நீதிக்கதை

மனம் இருந்தால் போதும்

ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி...!

ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன்.

பணமோ, காசோ கொடுப்பது மட்டுமல்ல. இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார்...! எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை... மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்.

இன்றைய செய்திகள்

24.02.22

★தமிழகம் முழுவதும் பிப்.27-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

★நடப்பு நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 2,600 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

★இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜன.2022 பருவ மாணவர் சேர்க்கை பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

★நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் சிறிய வகையிலான செயற்கைக் கோள்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று தேசிய அறிவியல் தின தொடக்க விழாவில் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை அறிவுறுத்தியுள்ளார்.

★உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது.

★முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்.

★புரோ கபடி :   பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

Today's Headlines

 ★ Polio vaccination camp will be held all over Tamil Nadu on February 27.

 ★ 2,600 train sets have been manufactured at the Chennai ICF factory in the current financial year.

 ★ Admission to IGNOU University Jan. 2022 has been extended till Feb.28.

 ★ Scientist Sivathanupillai advised students to create small satellites to help the country progress.

 ★ Just 20 km from Ukraine, Russia has stationed it's troops  Satellite photos of this have been published by Maxar Technologies of United States.

 ★ First T20 match: between India-Sri Lanka .

 ★ Pro Kabaddi: Patna Pirates, UP Yodha, Dabangg Delhi and Bangalore Bulls have qualified for the semi-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment