Pages

Tuesday, February 22, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 811

குறள்:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

பொருள்:
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது

பழமொழி :

Work will go on at any cost.


அடாது மழை பெய்தாலும்,விடாது
நாடகம் நடக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

தன் வாழ்க்கைக்கு தேவையான
முடிவை தானே சுயமாக
முடிவெடுக்க தெரியாதவன்
பெரும்பாலும் அடிமையாகவே
இருப்பான்...சுபாஷ் சந்திர போஸ்

பொது அறிவு :

1. விண் ஆம்புலன்ஸ் (Air Ambulance) வசதியை ஆரம்பித்துள்ள மாநிலம் எது? 

கர்நாடகா

2. முதலில் புத்தகம் அச்சடித்த நாடு எது? 

சீனா.

English words & meanings :

It's on me - I will pay for it, நான் பணம் கொடுத்து விடுகிறேன், 

fit as fiddle - healthy, ஆரோக்கியமாக உடம்பை வைத்து கொள்வது

ஆரோக்ய வாழ்வு :

முட்டைகோஸில் வைட்டமின் கே, வைட்டமின் பி1 , பி 3 ,பி5,பி6 புரதச்சத்து, சல்பர், இரும்புச்சத்து, ஆகிய ஊட்டச்சத்துக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இருக்கின்றன. பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டுமின்றி வாய்ப்புண் ஆகியவையும் சரியாகும்.

கணினி யுகம் :


பிப்ரவரி 23


சீகன் பால்க் 




சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.

நீதிக்கதை

தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

23.02.22

◆மத்திய அரசின் வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும்" என கூறியுள்ளார்.

◆நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி. 21 மாநகராட்சிகளையும் திமுக வசப்படுத்தியிருப்பது கவனத்துக்குரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

◆ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் "கடற்படை ஆய்வு 2022" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கடற்படையின் 63 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் 50 விமானங்கள் அணிவகுத்தன. சுமார் 10,000 வீரர்கள் கடற்படை யின் வலிமையை பறைசாற்றினர்.

◆உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

◆மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

◆ரியோ ஓபன் டென்னிஸ் - கோப்பையை கைப்பற்றினார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்.

Today's Headlines

  ◆ Opposing the central government's draft National Higher Education Qualifications Framework, Tamil Nadu Higher Education Minister Ponmudi said, "The new system that the central government wants to introduce is crueler than the NEET system. It will expel students from educational institutions."

  ◆The DMK alliance has sweep the poll offices in the urban local government elections.  The DMK's conquest of 21 corporations is seen as a remarkable success.

 ◆ "“ Naval Exploration 2022 ”event was held yesterday in Visakhapatnam, Andhra Pradesh.  In this there is a grand procession of  63 warships, submarines and 50 aircraft of the Indian Navy.  About 10,000 soldiers declared the strength of the navy.

 ◆ Russia has blamed bombings from Ukraine for damaging its border structure.

  ◆ India's young Grand Master Pragyananda defeats world champion Magnus Carlsen in the Masters Chess Tournament.

 ◆ Rio Open Tennis - Spanish player Alcaras wins the trophy.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment