Pages

Monday, February 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.02.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பழைமை

குறள் எண்: 808

குறள்:
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

பொருள்:
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்

பழமொழி :

The bearer knows the burden. 

சுமப்பவனுக்கு தெரியும் பாரம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

இழந்த இடத்தை பிடித்து விடலாம் ஆனால் இழந்த காலத்தை திரும்ப பெற முடியாது. எனவே காலத்தை பொன் போல உபயோகிக்க வேண்டும்

பொது அறிவு :

1. கைப்பந்து ( Volley ball) விளையாட்டு பிறந்த நாடு எது? 

அமெரிக்கா. 

2. பகவத்கீதை எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது? 

சமஸ்கிருதம்.

English words & meanings :

Tranquil - peaceful, அமைதியான, 

serene - calmness, கடவுளின் சந்நிதி போன்று அமைதியான

ஆரோக்ய வாழ்வு :

பூசணி விதை எலும்பு ஆரோக்கியததை மேம்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீர்ப் பாதை தொற்zறை சரி செய்ய உதவுகிறது.

கணினி யுகம் :

Ctrl + J - Justify paragraph alignment. 

Ctrl + Z - Undo last action

பிப்ரவரி 22


ராபர்ட் பேடன் பவல் பிரபு அவர்களின் பிறந்தநாள்




ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 221857 - ஜனவரி 81941சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

இளைஞர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் நினைவுநாள்




மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmedஇந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்துமுசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கதை


கோபக்கார முனிவர்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு காட்டில் ஒரு முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன், தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான். தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக, மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது நண்பனின் நிலையைக் கண்டு கதறி அழுதான்.

இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம், மற்றொரு காட்டுவாசி சாபத்தை நீக்குமாறு வேண்டினான். அதற்கு முனிவர், எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர, சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குருவிடம் சென்று அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா! என்று சொல்லிவிட்டு, தன் குருவைத் தேடிச் சென்றார் முனிவர். தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார் முனிவர். மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம்! என்றார். அதற்கு இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார்.

குரு, கந்தபுரத்தில் சுந்தரன் என்ற புண்ணியவான் இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம் என்றார். முனிவர், அந்த சுந்தரனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே மயங்கிப் போய் அவளையே உற்றுப் பார்க்க, அதனால் கோபமடைந்த அந்தப் பெண், முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்றுகேட்டதும், முனிவருக்கு கடுங்கோபம் உண்டாயிற்று.

அடி பெண்ணே! உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய்! என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள். பிறகு முனிவர் கந்தபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் சுந்தரனின் வீட்டுக்கு செல்ல வழி கேட்டார். ஆனால் அவன், சுந்தரனின் பெண் மிக அழகானவள். அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா? உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா? என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று முனிவர் சபித்துவிட்டு சுந்தரனின் வீட்டைக் கண்டு பிடித்தார்.

முனிவரை சுந்தரன் வரவேற்று அமரச் செய்தார். என் குரு தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து, என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு, வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். கோபம், பொறாமை, ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும், வாக்கினாலும், உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன் என்றான் சுந்தரன்.

முனிவர், நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா? என்று சுந்தரனிடம் கேட்டார். கடவுள் என்னிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் உறைகிறார். அவரைத் தனியாக பூஜையோ, தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே, அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும்! என்றான் சுந்தரன். 

நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று கூறுகிறீரா? என்று கோபமாகக் கேட்டார். சுவாமி! நான் உங்களைப் பற்றியோ, உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்! என்று பணிவுடன் பதில் கூறினான். சுந்தரன் பணிவுடன் கேட்டும் முனிவருக்கு சுந்தரனின் மேல் கோபம் குறையவே இல்லை. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய்! என்று சாபமிட்டார். ஆனால், சுந்தரனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் சுந்தரன் பணிவுடன், சுவாமி! சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான்! என்று மன்னிப்புக் கேட்டார்.

சுந்தரா! நான் உனக்கு இட்ட சாபம் உனக்குப் பலிக்கவில்லையே ஏன்? என்று கேட்டார். சுவாமி! அப்படியில்லை. காட்டுவாசி, அழகான இளம்பெண், வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து தங்கள் தவவலியை நஷ்டமாகிவிட்டது. நான் மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன்.

அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும். உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும்! என்றார். தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த முனிவர், சுந்தரனுக்கு நன்றி கூறிவிட்டு மௌனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில், தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார்.

தவத்தினால் பல சக்திகளை அடையலாம். ஆனால், தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும், பிறருக்கு உதவி செய்வதையே இலட்சியமாகக் கொண்டவனுமான ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான்! என்றார். குருவே! இப்போது சுந்தரன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா? என்று முனிவர் சந்தேகம் கேட்டார். மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். சுந்தரனின் சக்தி குறையவில்லை. முன்பைவிட இப்போது அதிகமாகி விட்டது! என்றார் முனிவர். கோபத்தால் இனி யாருக்கும் சாபம் இடக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார். 

நீதி :
சினம் சேர்க்கும் புண்ணியத்தை அழிக்கும்.

இன்றைய செய்திகள்

22.02.22

◆சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் பிப்.27-ல் பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்.

◆தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் பேர் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

◆போட்டித் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

◆தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

◆ரூ.15,000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு: புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர பிஎப் பரிசீலனை.

◆கனடாவில் திவாலான 3 கல்லூரிகள் மூடல்: 2,000 இந்திய மாணவர்கள் தவிப்பு.

◆படையெடுப்பில் யாரைக் கொல்ல வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது: ஐ.நா.வுக்கு அமெரிக்கா கடிதம்.

◆‘கலப்பு மார்சியல் ஆர்ட்ஸ்’ என்ற சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் இந்திய வீராங்கனை விர்தி குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார்.

◆ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி 6 ஆண்டுக்கு பிறகு முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

Today's Headlines

 ◆ Bird Survey on Feb 27 in Coimbatore on behalf of Saleem Ali Bird Research Center: Those interested can register.

 ◆ The postgraduate teacher examination for 2.5 lakh students across Tamil Nadu ended yesterday.

 ◆ Revised Annual Examination Schedule for Competitive Examinations has been published on the DNBSC website.

 ◆ Chances of rain for 4 days in Tamil Nadu: Information by Meteorological Center.

  ◆ For basic wage earners above Rs.15,000: PF review to bring in the new pension scheme.

 ◆ 3 colleges in Canada closed due to Bankruptcy: 2,000 Indian students suffer.

 ◆ Russia is having a hit list for the people to be killed during invasion: US letter to UN.

 ◆ Virti Kumari of India wins bronze medal in International Mixed Martial Arts Competition

 ◆ ICC  The Indian team has moved up to number one in the rankings for the T20 cricket series after 6 years.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment