Pages

Thursday, February 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 814

குறள்:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

பொருள்:
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

பழமொழி :

Better one word in time than two afterward.


வேலை அறிந்து பேசு,நாளை அறிந்து பயணம் மேற்கோள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

சிறந்த குறிக்கோளை
அடைவதற்காக மனிதனால்
செய்யப்படும் முயற்சியே
பிற்காலத்தில் மற்றவர்களால்
படிக்கப்படும்
வரலாறாக மாறுகிறது...பரமஹம்சர்


பொது அறிவு :

1. நோபல் பரிசு வழங்கும் நாடு எது? 

ஸ்வீடன். 

2. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்? 

ரபீந்திரநாத் தாகூர்.

English words & meanings :

Gorgeous - very beautiful, மிகவும் அழகான, 

Spotless - very clean, சிறிதும் அழுக்கற்ற தூய்மை இடம்

ஆரோக்ய வாழ்வு :

பப்பாளியில் வைட்டமின் சி, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள். அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவை சரியாகும். அனீமியா என்னும் ரத்தசோகையை தீர்த்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அல்சர், கண்ணெரிச்சல் குணமாக உதவுகிறது. குழந்தைகள் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவதால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.



நீதிக்கதை


இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்

25.02.22

◆உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர் நலவாரியம்' அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

◆"ரஷ்யா - உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்" என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

◆போர் பதற்றம் நிலவும் உக்ரைனில் இருந்து 240 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

◆உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன.

◆நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று அசத்தல்.

◆சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

Today's Headlines


◆ The Government of Tamil Nadu has announced the number of liaison officers to assist the families of Tamil Nadu students and migrants stranded in Ukraine.

 ◆  The government of Tamil Nadu has set up a 'Press Welfare Board' to provide welfare grants and welfare assistance to journalists.

◆  "Russia-Ukraine conflict could become a major issue"  India has expressed concern at the Security Council meeting.

 ◆ 240 Indian students return home from war-torn Ukraine

 ◆ Many countries and international organizations have condemned Russia's attack on Ukraine.  Most countries are opposed to Russia's military action.

  ◆ Last ODI against New Zealand; the Indian women's team wins

  ◆ Nandini advanced to the semifinals of the International Boxing Championships to secure the first medal for India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment