Pages

Thursday, February 10, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.22

 திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண் : 784

குறள்:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

பொருள்:
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

பழமொழி :

No one knows another's a burden.


 எருதின் நோய்  காக்கைக்கு தெரியுமா

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

விதை போன்றே எண்ணங்களும்; நாம் இங்கு விதைப்பதே முளைக்கும்!வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - அப்துல் கலாம்

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS யார்? 

திருமதி. திலகவதி.

 2. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது? 

நாமக்கல்.

English words & meanings :

Enraged - furious, angry, கோபம், ஆத்திரம், 

intriguing - interesting, exciting, ஆர்வம் தூண்டுதல்

ஆரோக்ய வாழ்வு :

பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. ஹா ஹா ஹா மூல நோய் மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். எப்படி வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும், மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

கணினி யுகம் :

Show view (view:) - Alt + Shift + Q, X.

 Show view ( view: outline) - Alt + Shift + Q, O


பிப்ரவரி 11


தாமசு ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்




தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edisonபெப்ரவரி 111847 – அக்டோபர் 181931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

நீதிக்கதை


சோதனை

ஒரு ஊரில் கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கு சிவா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வந்தான். ஆரம்பத்தில் அவன் செய்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்படியே சில மாதங்கள் கடந்தன. திடீரென அவன் செய்த தொழிலில் மந்தமான போக்கு ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைந்தான். எனவே என்ன செய்வது என்று புரியாமல் மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டான்.

தன் மகனின் சூழ்நிலையைக் கண்ட கணேசன், மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்குள் சென்றார். சமையலறையில் இருந்து மூன்று பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு உருளைக்கிழங்கையும், இரண்டாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு முட்டையையும் போட்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வைத்து வேக வைத்தார். உருளைக்கிழங்கும், முட்டையும் நன்கு வெந்ததும், இரண்டையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார்.

பிறகு மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் டீத்தூளை கலந்து அடுப்பில் வைத்தார். சூடான டீ தயார் ஆனது. சூடான டீயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு காபி கப்பில் ஊற்றி சூடாக தன் மகனுக்கு கொடுத்தார். சிவாவும், அப்பா கொடுத்த டீயை வாங்கிப் பருகினான். அப்போது கணேசன் தன் மகனிடம் கேட்டார். சிவா! நீ இப்போது நன்றாக வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவனா? அல்லது முட்டையைப் போன்றவனா? அல்லது டீத்தூளைப் போன்றவனா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல் என்றார்.

அதற்கு சிவா, அப்பா! எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அதற்கு கணேசன், உருளைக்கிழங்கு, முட்டை, டீத்தூள் ஆகிய மூன்று பொருட்களும் ஒரே எதிரியாகிய கொதிக்கும் தண்ணீரைத்தான் சந்தித்தன. அதில் முட்டையானது, தனது கடினமான வெளித்தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும், தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது. உருளைக்கிழங்கோ, கொதிக்கும் தண்ணீரில் இளகிப் பலவீனப்பட்டுவிட்டது. ஆனால், டீத்தூளோ வெந்நீரை மணமுள்ளதாக்கி சுவையானதாக மாற்றிவிட்டது.

இந்த முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் டீத்தூளைப் போலத்தான் மனிதர்களில், ஒரு சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றார்கள். அதைப்போல் ஒரு சிலர் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெளிகாட்டாமல் முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றார்கள். வேறு சிலர் உருளைக்கிழங்கு போல துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொண்டு மனத்தோற்றம், வெளித்தோற்றம் ஆகிய இரண்டிலும் கோழைகளாகி விடுகின்றனர். இப்போது என் கேள்வி உனக்கு புரிகிறதா? என்று சிவாவிடம் கணேசன் கேட்டார்.

அதற்கு சிவா, அப்பா இனி நான் டீத்தூளைப் போன்றவன் என்று உற்சாகமாகப் பதில் சொன்னான். இன்று முதல் நான் டீத்தூளைப் போலவே எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை நான் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டு வாழ்வேன் என்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினான். சிவா கூறியது போலவே புத்துணர்ச்சியுடன் தொழிலில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று சிந்தித்து, அதை தொழிலில் புகுத்தி செயல்பட ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே அவன் செய்து வந்த சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

நீதி : சோதனையை சாதனைகளாக மாற்ற முயல வேண்டும்.

இன்றைய செய்திகள்

11.02.22

◆10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

◆சட்ட விதிகளை மீறி ரயில் தண்டவாளங்களை கடந்து சென்றால் 6 மாதம் சிறை தண்டனை: தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் எச்சரிக்கை.

◆தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

◆தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் இந்த பாலங்கள் கட்டப்பட உள்ளன.

◆டாம்டாம் அமைப்பு 2021-ம் ஆண்டுக்கான உலகளாவிய போக்குவரத்து நெரிசல் குறியீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், மும்பை 5-வது இடத்திலும், பெங்களூரு 10-வது இடத்திலும் உள்ளன.

◆நேபாள நாட்டுப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்நாடு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளது.

◆புரோ கபடி லீக்: உ.பி. யோத்தா, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி.

◆புரோ ஹாக்கி லீக்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

Today's Headlines

 ◆ CBSE has announced that the second phase public examination for 10th and 12th class students will begin on April 26.

  6 months imprisonment for crossing the tracks against the law: Southern Railway Chennai Rail Division Warning.

  ◆ 87% of people in Tamil Nadu have developed immunity, said the Tamil Nadu Health Minister.

 The Government of Tamil Nadu has given administrative approval to build 114 new bridges at a cost of Rs. 336 crore in rural areas across Tamil Nadu.  These bridges are to be constructed with the financial assistance of NABARD.

 The organization TomTom has released the Global Traffic Congestion Index for 2021.  In this list, Mumbai ranked 5th, and Bangalore ranked 10th.

 For the first time, Nepal has officially complained that China is occupying parts of Nepal.

 Pro Kabaddi League: UP  Yodha, Gujarat Giants win.

  Pro Hockey League: India beat South Africa by a huge margin.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment