Pages

Wednesday, February 9, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.22

    திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண் : 783

குறள்:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

பொருள்:
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

பழமொழி :

The finest lawn soonest stains.


 காய்ந்த  மரமே கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது.தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு, அடுத்தவரின் வெற்றி பொறாமை எண்ணத்தை மட்டுமே உருவாக்கும்!.சாணக்கியன்

பொது அறிவு :

1. அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய மாதமாக எந்த மாதம் அறிவிக்கப்பட்டது? 

ஜனவரி மாதம்.

 2. தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது? 

காவிரி ஆறு.

English words & meanings :

Nimble - fast and brisk, வேகமான, சுறுசுறுப்பான. 

Enormous - huge, large, மிக பெரிய

ஆரோக்ய வாழ்வு :

கருவேப்பிலை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் பச்சையாக உண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கருவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதயநோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.




கணினி யுகம் :


Show key assist - ctrl + shift + L. 


 Show view - Alt + Shift + Q , Q

நீதிக்கதை

*உண்மையான அன்பு எது..??* 

ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.

குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. 

குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். 

பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில், 

*அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது* என்று 

குரு சீடனுக்கு புரிய வைத்தார்.

இன்றைய செய்திகள்

10.02.22

🍁நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

🍁பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நெல், கோதுமை உமி உள்ளிட்ட வேளாண் கழிவுகளில் தேநீர் கோப்பைகள் தயாரிப்பு: உதகையில் அசத்தும் இளைஞர்கள்.

🍁செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

🍁15-18 வயது பிரிவில் இதுவரை தடுப்பூசி செலுத்தியோர் 67 சதவீதம் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.

🍁ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் உயிரிழப்புகள் பதிவு: உலக சுகாதார நிறுவனம் கவலை.


🍁பெண்கள் கிரிக்கெட்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; முன்னேற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்.

🍁புரோ ஹாக்கி லீக்: பிரான்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்.

Today's Headlines

 As the urban local elections approach, the State Election Commission has ordered a ban on posting election advertisements and posters on the walls.

 Preparation of tea cups in agricultural waste including paddy and wheat husk as an alternative to plastic products: Ooty youths' Awesome invention.

 Tamil Nadu ranks 2nd in nation wide with 26.03 lakh accounts under the "Selvamahal Savings Scheme" .

 The Union Minister said that 67 per cent of the 15-18 year olds have been vaccinated so far.

  5 lakh deaths recorded after omega micron spread: World Health Organization Concern.


 Women's cricket;  Dominating Australia;  Progressive Indian Women athletes.

 Pro Hockey League: India beat France.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment