Pages

Friday, February 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.22

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண் : 786

குறள்:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

பொருள்:
மலரும் படியாக
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

பழமொழி :

No honest man ever repented of his honesty .
 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்- அறிஞர் அண்ணா.

பொது அறிவு :

1. மனிதனுக்கு இணையான அறிவாற்றல் கொண்ட ஒரே விலங்கு எது? 

டால்பின். 

2. தனது மூக்கில் பல் உடைய விலங்கு எது? 

முதலை.

English words & meanings :

Engrossing - interesting, ஆர்வத்தை ஈர்த்தல், 

gracious - kind, generous, கனிவான, இனிய பண்பு

ஆரோக்ய வாழ்வு :

ஓமம்- செரிமானக் கோளாறு, சளித்தொல்லைக்கு தீர்வாகும். ஓமம் தண்ணீர், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பசியைத் தூண்டவும், ஒற்றைத் தலைவலி குணமாகவும் உதவுகிறது.




கணினி யுகம் :

Undo - ctrl + z. 

 Uppercase - ctrl + shift + x

நீதிக்கதை

குதிரை திருடன்

சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.

மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார். குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.

குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார்.

சொல்லாதே! என்றார். திருடன் மிரண்டான். எது? என்ன? என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான். சாது சொன்னார். குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிய வந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.

நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும். தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு உதவி கிடைக்காமல் உயிர் போககூடும். புரிகிறதா? திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

நீதி : நல்லவர்களையும், நல்ல நட்பையும் இழந்து விடக் கூடாது.

இன்றைய செய்திகள்

12.02.22

நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது தொடர்பாக, பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வு இன்று தொடக்கம்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காணமாக, தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுங்கச் சாவடி பாஸ்டேக் மூலம் ரூ.5,324 கோடி கூடுதல் வசூல்: மத்திய தரைவழி போக்குவரத்துத் துறைஅமைச்சர் தகவல்.

அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

போர்மேகச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் புரோ ஹாக்கி லீக்கில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து நெதர்லாந்து அணி விலகியுள்ளது.

Today's Headlines

 The Government of Tamil Nadu has ordered the  various formed committees to monitor the removal and occupation of government lands, including water bodies.

  Exam for the selection of the postgraduate teaching job begins today through online.

 The Chennai Meteorological Department has forecast heavy rains in one or two places in the southern coastal and delta districts today and tomorrow due to the prevailing atmospheric circulation in the Gulf of Mannar.

 Rs 5,324 crore additional revenue collected through toll gate's fast tag: Central Land Transport Minister's information 

 The federal government has announced that people from 72 countries, including the United States, will no longer need 7 days of compulsory isolation.  The new guidelines will come into force on the 14th.

 President Joe Biden has advised trapped Americans to leave the war torn Ukraine immediately. 

 Five Tamil Nadu players have been selected for the training camp of the national junior hockey team.

 The Netherlands have been ruled out of the Women's Pro Hockey League match against India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment