Pages

Sunday, February 6, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.02.22

  திருக்குறள் :

பால் : பொருட் பால்

இயல் - படையியல்

அதிகாரம் - படைச் செருக்கு

 குறள் எண் 776

 குறள் 
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்

பழமொழி :

You can not make an omelette without breaking an egg


நகம் நனையாமல் நத்தை பிடிக்க முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். - அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1. இந்தியாவில் வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது எது? 

அசோக சக்ரா விருது. 

2. 2021 ஆம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

பாபு ராம்.

English words & meanings :

Swift - quick, வேகமாக, 

Elaborate - explain, விரிவான விளக்கம்

ஆரோக்ய வாழ்வு :

அவரைக்காய் புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

கணினி யுகம் :

Ctrl + Shift + F7 - Previous view. 

Ctrl + Shift + F6 - Previous editor

பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்




தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

துன்பம்

பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை ஜன்னல் அருகில். இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

ஜன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் சொன்னார்.. உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..! கவலைப்படாதே நண்பா.. நான் ஜன்னல் வழியாக என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் ஜன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா....ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி... நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்... ஜன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்... ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலையில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடி கொண்டிருக்கிறார்கள். மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்... மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்...! 

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்... ஒருநாள் ஜன்னல் நோயாளி செத்துப்போனார்... மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுதுபோகும் என்று எண்ணியவாறே... தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே நோக்க... அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை...! அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்... செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்... நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது... புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..! 



நீதி :
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்களை குறைக்கூறாதீர்கள்.

இன்றைய செய்திகள்

07.02.22

* அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் ஒருவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி  லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.

* முக கவசம் உடன் கூடிய முக அடையாளத்துக்கான புதிய அல்காரிதங்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

* நீட் எதிர்ப்பில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு விரோதமாக எந்த திட்டம் வந்தாலும் அதை எதிர்ப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு அபார வெற்றி.

* அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்து அணியை 189 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 190 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டி 5வது முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.


Today's Headlines

 * A young man who sells tea in Assam has passed the NEET exam on the first try.  He currently has a seat at the Delhi Aims Medical College.

 
 *Popular playback singer Lata Mangeshkar has passed away.  She is 92 years old.

 * Apple has developed new algorithms for facial recognition with face masks .

 * We will never back down in NEET resistance.  Not only NEET, we will oppose any plan that comes against Tamil Nadu - Chief Minister MK Stalin.

 * In the first ODI against India, the West Indies lost all their wickets and scored only 176 runs, India won by 4 wickets.

 * India beat England by 189 runs in the Under-19 World Cup final.  India won the Under-19 World Cup for the 5th time with a simple target of 190 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment