Pages

Friday, February 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.02.22

 திருக்குறள் :

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பொருள்
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

பழமொழி :

All’s well that ends well


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்தரும்,

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

முயன்றால் பட்டாம் பூச்சி முயலவில்லை என்றால் கம்பளி புழு.

பொது அறிவு :

1. ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியை தலைநகராகக் கொண்டு எந்த மாவட்டம் உருவாகியுள்ளது? 

ஸ்ரீ பாலாஜி மாவட்டம். 

2. இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான எந்த நாட்டு விமானம் தற்போது இமயமலை பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது? 

அமெரிக்கா - C 46 ரக விமானம்.

English words & meanings :

Wealthy - very rich, மிகுந்த செல்வம் உடைய, 

meticulous - very detailed, மிகவும் நேர்த்தியாக கொடுக்க பட்ட விவரம்

ஆரோக்ய வாழ்வு :

சர்க்கரைவள்ளிக் கிழங்கு நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும். ரத்த செல்கள் உருவாக உதவும். எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும். பளபளக்கும் சருமத்தை கொடுக்கும்.




கணினி யுகம் :

Alt + Shift + Left - Previous Tag. 

Ctrl + Alt + 8 - Previous Term

நீதிக்கதை

சொர்க்கமும் நகரமும்

அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.

பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.

அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் பறக்கும்போது நான் வாய் பசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதைப் பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்

இன்றைய செய்திகள்

05.02.22

★ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை, கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

★தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் 6, 7-ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

★முதுநிலை மாணவர்களுக்கான 2022 ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

★தூர்தர்ஷனின் குடியரசு தின ஒளிபரப்பு உலகளவில் பிரபலமானது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் யூடியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.

★தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

★வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது இஷான் கி‌ஷனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

★24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட இருப்பது, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Today's Headlines

★ The Chennai High Court has directed the Coimbatore, Nilgiris, and Dindigul District Collectors to study and report on the strict enforcement of the banning of plastic in Ooty and Kodaikanal.

 ★ The Department of Education has advised the teachers to complete the lessons for the 10th and 12th class students writing the general examination as soon as possible.

 ★ The northern coastal districts of Tamil Nadu are likely to receive showers on the 6th and 7th: Indian Meteorological Department.

 ★ The Federal Ministry of Health has announced that the NEED entrance test for 2022 for postgraduate students will be postponed for 6 to 8 weeks.

 ★ Doordarshan's Republic Day broadcast is world-famous.  The number of people watching Doordarshan's YouTube programs on Republic Day has increased to 2.6 crores.

 ★ South Korea has introduced a mask that covers only the nose to escape from the corona.  This is called a kiosk.

 ★ Ishant Kishan has been included in the India squad for the ODI series against the West Indies, with Mayang Agarwal currently in the squad.

 ★ The fact that the Australian team is going to play cricket on Pakistani soil 24 years later has excited the fans.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment