Pages

Thursday, February 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைச்செருக்கு

குறள் எண்: 774
குறள்:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

பொருள்:
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. ____காமராசர்

பொது அறிவு :

1. சமீபத்தில் எங்கு நெகிழி பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது? 

மங்களூரு. 

2. தமிழ்நாட்டில் எங்கு நெகிழி பூங்கா அமைந்துள்ளது? 

திருவள்ளூர் மாவட்டம் - வோயல்லூர்.

English words & meanings :


Incident. நிகழ்ச்சி
Remember நினைவுபடுத்துதல்
Convenient. வசதியான
Platform. நடைபாதை
Involve. ஈடுபாடு

ஆரோக்ய வாழ்வு :

நாவல் பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும். வைட்டமின் பி1,பி2,பி5 ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரையை தடுக்கும் அருமருந்து.

கணினி யுகம் :

Ctrl + O - Open file. 

Ctrl + Shift + p - Open project

பிப்ரவரி 4

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்


வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்




உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்[1

நீதிக்கதை


ஒருவர் தினமும் கோவிலுக்கு தியானம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார். அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதமானது. அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, அப்படி என்ன தான் தியானத்திலே இருக்கு? இன்று இவ்வளவு தாமதமாக வீட்டிற்கு திரும்பி வருகிறீர்களே. தினமும் அங்கு சென்றுவிட்டு வருகிறீர்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அங்கு சென்றுவிட்டு வருவது நன்றாகவே இருக்கிறது என்றார். கோபமடைந்த மனைவி, முதலில் வீட்டில இருக்கின்ற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க என்றாள். 

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார். மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது. உடனே மனைவி, தினமும் தாமதமா வர்றீங்க. கேட்டால் தியானத்திற்குச் சென்றேன் என்று சொல்றீங்க. என்ன சொன்னார்கள் என்று கேட்டால் ஒன்றும் தெரியலைன்னு சொல்றீங்க. நீங்க தியானம் கேட்கப்போறதன் பயன் இதோ இந்த சல்லடையில் ஊற்றிய தண்ணீரைப் போலத்தான் எதற்கும் பயன்படாது என்று கூறினாள்.

நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேண்டுமானால் நிரப்ப முடியாமல் போகலாம். ஆனால், அழுக்காக இருந்த சல்லடை இப்பொழுது பார் நன்றாக சுத்தமாகி விட்டது. அதுபோல, தியானத்தில் சொல்கிற விஷயம் வேண்டுமானால் எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனால் என்னுடைய மனதில் இருக்கிற அழுக்கையெல்லாம் படிப்படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது என்று சொன்னார். 

நீதி :
உபதேசம் கேட்பதால் உள்ளம் தூய்மையடையும்.

இன்றைய செய்திகள்

04.02.22

★நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி.

★சென்னை புத்தகக் காட்சியை இம்மாதம் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

★எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


★வரும் ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

★தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

★19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

★தென்அமெரிக்க கண்டத்துக்கான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே அணிகள் வெற்றி பெற்றன.

Today's Headlines

 ★ The bill passed in the Tamil Nadu Legislative Assembly seeking exemption from NEET examination has been sent back to the Government of Tamil Nadu by Governor RN Ravi .

 ★ The Government of Tamil Nadu has given permission to hold the Chennai Book Fair from the 16th of this month to the 6th of March.

 ★ General section consultation for MBBS, BDS courses started online.  Details of places reserved for students will be released on the 15th.


 ★ Union Minister of State for Science and Technology Dr. Jitendra Singh has said that Chandrayaan-3 is scheduled to be launched in August.

 ★ Dismissal if not vaccinated: US warns soldiers.

 ★ India defeated Australia by 96 runs in the semi-finals of the Under-19 World Cup to reach the final.

 ★ Brazil, Argentina and Uruguay won the World Cup qualifiers for the South American continent.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment