Pages

Monday, February 7, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.02.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைச்செருக்கு

குறள் எண்: 778

குறள்:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

பொருள்:
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

பழமொழி :

When at rome do as romens do 


ஊரோடு ஒத்துவாழ்,  

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்கள் நம்மை உருவாக்கும் எனவே என் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்க முயல்வேன் 

2. என் எண்ணங்களை உருவாக்குவது நான் வாசிக்கும் புத்தகங்களும் நல் ஆலோசனைகளுமே எனவே புத்தக வாசிப்பிலும் நல் ஆலோசனையிலும் நேரம் செலவழிப்பேன்

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்க, மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை எது? 

மேட்டூர் அணை.


2. கணித மேதை இராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? 

ஈரோடு மாவட்டம்.


English words & meanings :

Appealing - attractive, கவர்ந்து இழுத்தல் 

elegant - dazzling, மிகவும் நேர்த்தியான

ஆரோக்ய வாழ்வு :

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக்கீரை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும் ,குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும், எரிச்சலையும், குணப்படுத்துகிறது.

கணினி யுகம் :

windows key + home - Minimize all but the current window. 

windows key + shift + M - Restore all minimized windows

பிப்ரவரி 08


சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்




சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

நீதிக்கதை

இரண்டு மரம்

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா? என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் எனக்கு தெரியும் நான் வலுவிழந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.

நீதி :
உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.

இன்றைய செய்திகள்

08.02.22

◆சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 28 வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆சூழலை பாதுகாக்க சாயம் தோய்க்காத துணிப் பை பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டம்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தகவல்.

◆இணையவழி தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விடைத்தாளை தேர்வெழுதிய தினமே பதிவேற்ற வேண்டும்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உத்தரவு.

◆100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சலிங் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

◆கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே டோஸில் செலுத்திக் கொள்ளும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

◆2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா.

◆பெண்களுக்கான ஆசிய கால்பந்து: 9-வது முறையாக கோப்பையை வென்றது சீனா.

◆விரைவில் பெண்கள் ஐ.பி.எல்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்.

Today's Headlines

 The Government of Tamil Nadu has announced that the last date for sending applications for the Chief Minister's Computer Tamil Award to the best Tamil software developers will be extended upto 28th of this month.

 Scheme to promote the use of non-dye cloth bags to protect the environment: Tamil Nadu Pollution Control Board officials informed.

  Students appearing for the online examination should upload the answer sheet on the day of the examination: Tamil Nadu Open University Order.

  The Ministry of Defense has announced that e-counseling will be conducted for student admission in 100 new Sainik schools.

 ◆ The federal government has approved the emergency use of the single-dose Sputnik Lite vaccine against the corona virus.

  Australia grants permission to tourists after 2 years.

 ◆ Asian football for women: China wins trophy for the 9th time.

 ◆ Women's IPL coming soon: BCCI Secretary Jai Shah informs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment