Pages

Thursday, February 6, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.02.20

திருக்குறள்


அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

விளக்கம்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பழமொழி

Chew your food well and live a long life

  நொறுங்கத் தின்றால் நூறு வயது.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

அடிக்கடி மாற்றம் உண்டானால் மாறுவது கடிகார முற்கள் மட்டுமே... நிலையான மாற்றம் பெற நெடுநாள் திட்டமும் பயிற்சியும் தேவை.

பொது அறிவு

1.இரத்தம் உறையாமல் இருக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?

 சோடியம் சிட்ரேட்

2."இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம்" என்றழைக்கபடும் மாநிலம் எது?

 உத்திரப்பிரதேசம்.

English words & meanings

Koniology – study of atmospheric pollutants and dust. வளிமண்டலத்தில் உள்ள தூசு மற்றும் அவற்றால் உயிரிகள் மீது ஏற்படும் பாதிப்பு.

Knotty - with knots. முடிச்சுகள் வாய்ந்த

ஆரோக்ய வாழ்வு

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

Some important  abbreviations for students

etc. - and so on. 

p. - page

நீதிக்கதை

சிங்கத்தை காப்பாற்றிய எலி

குறள் :
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் :
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

கதை :
முன் ஒரு காலத்தில் சிங்கம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. ஒரு நாள் பலமான மதிய உணவினை முடித்து விட்டு ஒரு மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பின், அங்கு வந்த ஒரு எலி சிங்கத்தின் மீது விளையாட தொடங்கியது.

திடீரென்று சிங்கம் கோபத்துடன் எழுந்து அதன் நல்ல தூக்கத்தினை தொந்தரவு செய்தது யார் எனப் பார்க்கும்போது, ஒரு சிறிய எலி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்த சிங்கமானது எலியினை கொல்ல வேண்டும் என முடிவெடுத்தது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த எலி தன்னை மன்னிக்குமாறு சிங்கத்திடம் வேண்டியது. சிங்கம் எலியிடம் மனதுருகி அதனை விட்டுவிட்டது. பின் எலி வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடியது.

மற்றொரு நாள், சிங்கம் ஒரு வேடனின் வலையில் சிக்கி கொண்டதைப் பார்த்த எலி அங்கு வந்து வலையினை வெட்டி சிங்கத்தை காப்பாற்றியது. இதனால் சிங்கம் தப்பித்துக் கொண்டது. பின், எலி மற்றும் சிங்கம் நண்பர்களாயினர். அதன் பின்னர் அவர்கள் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

நீதி :
ஒருவர் ஆபத்து காலத்தில் உள்ள போது அவர்களுக்கு உதவ வேண்டும்.

வெள்ளி
சமூகவியல்

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்

*இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats).

*இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது.

*கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.

இன்றைய செய்திகள்

07.02.20

🍀தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

🍀இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து ஆசிரியர்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா அறிவுறுத்தியுள்ளார்.

🍀அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

🍀கோவையில் நேற்று நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், இந்தியன் ஏரோஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை சிட்டி எஃப்.சி. அணி.

🍀மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 64 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றாா் வீராங்கனை ராக்கி ஹால்டா்.

Today's Headlines

🌸In Tamil Nadu the drop out percentage increased 100% in 9th and 10th standard says Central Human Resource Development Commission minister Mr. Ramesh Pokrial.

🌸 Important acts Like Free and Compulsory Education has to be discussed among students to bring awareness among them - Retired High Court Judge Vimala.

🌸 The American Woman Astronaut Christina Coach declared as a Astronaut who stayed in the Space for a longer period.

🌸 In yesterday's 'Hero I League' foot ball match held at Covai Chennai City FC won against Indian Aeros by 1-0.

🌸Rocky Haltad won the gold medal in the 64kg category at the National senior weightlifting Championships held in Kolkata, West Bengal on Wednesday.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment