திருக்குறள்
Pages
▼
Thursday, October 31, 2019
Wednesday, October 30, 2019
Tuesday, October 29, 2019
Monday, October 28, 2019
Thursday, October 24, 2019
Wednesday, October 23, 2019
Tuesday, October 22, 2019
Monday, October 21, 2019
Sunday, October 20, 2019
Friday, October 18, 2019
Thursday, October 17, 2019
Wednesday, October 16, 2019
Tuesday, October 15, 2019
Monday, October 14, 2019
Sunday, October 13, 2019
Friday, October 11, 2019
Thursday, October 10, 2019
Wednesday, October 9, 2019
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.09.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம்:
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
பழமொழி
A bad day never hath a good night.
முதல் கோணல் முற்றும் கோணல்.
இரண்டொழுக்க பண்புகள்
1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.
2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.
பொன்மொழி
படிப்படியான வளர்ச்சி தான் நிலையான வெற்றியைத் தரும் ...அசுர வளர்ச்சி என்றும் அர்த்தமற்ற தோல்வியைத் தரும் ....
------ பில்கேட்ஸ்
பொது அறிவு
1. 13 மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்த இந்திய பிரதமர் யார்?
பி்.வி. நரசிம்ம ராவ்.
2. டெல்லியில் உள்ள 'ராஜ்காட் சமாதி' யாருடைய நினைவாக கட்டப்பட்டது?
மகாத்மா காந்தி
English words & meanings
1. Camphor - a white volatile subject with aromatic smell. கற்பூரம். வெள்ளை நிறம் மிகுந்த இனிய நறுமணம் கொண்ட திடப்பொருளாகும். இது இயற்கையாக சில மரங்களின் கட்டைகளிலும், செயற்கையாக டர்பென்டைன் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
2. Customer - a person who buys things or getting service. நுகர்வோர்
ஆரோக்ய வாழ்வு
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
Some important abbreviations for students
min. - minute or minimum.
misc. - miscellaneous
நீதிக்கதை
குருவி கொடுத்த விதை
ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது.
பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான்.
சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது.
திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான்.
அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது.
இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன.
அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார்.
அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார்.
மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார்.
நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவோம் அறிவியல்
நீரும் எண்ணெயும் கலக்குமா?
தேவையான பொருட்கள் : ஒரு மூடியுள்ள குப்பி, சமையல் எண்ணெய், சோப்,நீர் மற்றும் உணவு வண்ணம் .
செய்முறை :நீரை குப்பியில் எடுத்து கொள்ளவும். அதில் சிறு துளிகள் உணவு வண்ணம் இடவும். நன்கு கலக்கவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி நன்கு மூடி குலுக்கவும். எண்ணெயும் நீரும் சேராமல் இருப்பதைக் காணலாம். தற்போது அதில் சிறிது திரவ சோப்பை ஊற்றவும். இப்பொழுது கலக்குங்கள் எண்ணெயும் நீரும் கலக்க ஆரம்பிக்கும். காரணம் :சோப்பு இரண்டையும் நோக்கி ஈர்க்கப்படும். எனவே அது நீர் மற்றும் எண்ணெயோடு கலந்து அதை கலக்க ஆரம்பிக்கும்.
கணினி சூழ் உலகு
6, 7 & 8 - ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள ICT Corner activities செய்வது எப்படி என்பதைப் பற்றிய காணொலி
Click here to view the video
இன்றைய செய்திகள்
09.10.2019
* நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மொபைல் போன்கள் முதல் லேப்டாப்கள், இ-வாகனங்கள் வரையிலான எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக வேதியியல் விஞ்ஞானிகள் ஜான் பி குட்எனாப்(ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிங்ஷஹாம்(பிரிட்டன்) மற்றும் அகிரா யோஷினோ(ஜப்பான்) ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
* நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
* கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
* உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்.
* தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று புனேவில் 2-வது டெஸ்ட் தொடங்குகிறது.
Today's Headlines
🌸 The Nobel Prize was declared to John B. Goodenab (Germany), Stanley Wittenham (UK) and Akira Yoshino (Japan) for their work on the evolution of Lithium batteries, which is used in electronic devices, from mobile phones to laptops and e-vehicles.
🌸 Meteorological Department Warned that there will be heavy rainfall in some districts including Nellai, Madurai, Dindigul, Salem, Nilgiris and Coimbatore. .
🌸Netherland scientist invented a new technology to remove plastics in marine
🌸 Kerala Olympic Association awarded RS 10 lakh to our badminton champion P V Sindhu.
🌸 Indian team took initiation to win the series: Today the 2nd Test begins in Pune against South Africa .
Prepared by
Covai women ICT_போதிமரம்