Pages

Thursday, October 3, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.19

அக்டோபர் 4



உலக விலங்குகள் தினம்

திருக்குறள்

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:288

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம்:

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

பழமொழி

Come uncalled , sit unreserved.

 அழையாத வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி

இரண்டொழுக்க பண்புகள்

1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.

2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.

பொன்மொழி

மனிதனின் உள்ளத்தில் அன்பு நுழைந்தால் அது தர்மசிந்தனையை மட்டுமே ஏற்கும்..மாறாக கர்வம் நுழைந்தால் அழிவை நோக்கி மனதைச்  செலுத்தும் ...

----- விவேகானந்தர்

பொது அறிவு

1.'அமெரிக்காவின் காந்தி' என்று அழைக்கப்படுபவர் யார?

 மார்ட்டின் லூதர் கிங்.

2.'வறுமையே வெளியேறு' என்று முழங்கியவர் யார் ?

 இந்திரா காந்தி அம்மையார்.

English words & meanings

1. Yielding - not rigid, giving way. விட்டு கொடுத்தல்.

2. Yearning - strong desire. ஆழ்ந்த விருப்பம்.

ஆரோக்ய வாழ்வு

மருதாணி வெப்பத்தன்மை துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். மேலும் கை கால்களில் தோன்றும் சேற்றுப்புண்கள், அழுக்குப் படை ,கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

Some important  abbreviations for students

apt. - apartment. 

A.S.A.P - as soon as possible

நீதிக்கதை

கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்

ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார்.

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது.

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு.

நீதி :
உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

முகலாய சாம்ராஜ்யத்தின் மிக முக்கியமான கட்டிடக்கலை அற்புதங்களில் ஒன்று, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்.அதன் அனைத்து அழகிலும், நேர்த்தியிலும் இன்றும் உள்ளது. தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகான் தனது  மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட ஒரு வெள்ளை பளிங்கு அரண்மனை ஆகும். அரபு மொழியில், தாஜ்மஹால் ""அரண்மனைகளின் கிரீடம்"" என்று அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய விளையாட்டு

நூத்தாங்குச்சி

தென்னங் குச்சிகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு இது. சம நீளமுள்ள 10 சிறு குச்சிகளும், அவற்றை விட சற்றே நீளமான ஒரு குச்சியையும் கொண்டு விளையாடலாம். இருவர் முதல் சிறு குழுக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.

விளையாட்டின் பயன்கள்: உற்றுநோக்கல் திறன் வளரும். பொறுமையுடன் செயலாற்றுதல், கட்டுப்பாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துதல், தான் செய்யும் தவறுகளை உணர்தல் போன்ற திறன்கள் வளரும்.

இன்றைய செய்திகள்

04.10.2019

* இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் மகராஷ்டிரா அருகே அரபிக்கடலில் திறக்கப்பட்டுள்ளது.



* ஆயுத பூஜை, தீபாவளிக்காக சிறப்புப் பேருந்து  முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.

* ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் இந்திய செயல் இயக்குநர் பதவியில் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

* உலக தடகள போட்டியின் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

* தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியாவின் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

Today's Headlines

🌸India's first floating basketball stadium has been opened in the Arabian Sea near Maharashtra.

 🌸Ticket booking for Special bus service for Ayutha Pooja and Diwali has commenced from yesterday.

 🌸 Economist Surjit Palla has been appointed as the Indian Executive Director of the  International Monetary Fund (IMF).

 🌸 American athleter Grant Holloway won gold in the 110-meter hurdles in the World Athletics Championship.

 🌸 On the second day of the first Test against South Africa, India's Myank Agarwal hit a double century.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment