Pages

Sunday, October 13, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.10.19

திருக்குறள்


அதிகாரம்:வாய்மை

திருக்குறள்:294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

விளக்கம்:

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், உலக மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

பழமொழி

A man of course never wants weapons

 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்

2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

வாழ்நாள் குறைவுதான். காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம்.

 - விக்டர் ஹியூகோ

பொது அறிவு

அக்டோபர் 14 இன்று உலக தர நிர்ணய நாள்

1. இந்திய தர நிர்ணய அமைப்பின் பெயர் என்ன?
BIS(Bureau of Indian Standards).

2.'பசிபிக் பெருங்கடலின் சாவி' என்று அழைக்கப்படும் நகரம் எது ?

சிங்கப்பூர்

English words & meanings

1.Fullerene - an allotrope of carbon nearly consist of hollow cage 60 more atoms.
கார்பனின் புற வேற்றுமை வடிவம்.
இது மத்தியில் வெற்றிடம் இருக்கும் வகையில் முழுமையாக கார்பனால் ஆன மூலக்கூறுகளாகும்.

 2.Float - rest or move on  the surface of a liquid. மிதத்தல்

ஆரோக்ய வாழ்வு

பப்பாளி வெப்பத்தன்மை கொண்டது. பப்பாளிக்காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும் .பசியை உண்டாக்கும்.

Some important  abbreviations for students

• tsp - teaspoon.

• tbsp. - tablespoon

நீதிக்கதை

பறக்கும் குதிரை

பெர்ஷியாவின் சுல்தான் என்பவர் விந்தையான பொருள்களைக் கண்டால், அதை அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான். இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன? என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், இளவரசியைக் கை பிடிப்பது! என்று கூறினான்.

சுல்தானும் ஒத்துக்கொண்டார். ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்! என்று சுல்தான் கூறினார்.

சுல்தானின் மகன் குதிரை மீது அமர்ந்ததும் அது பறந்து எல்லோருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது. சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர்.

சுல்தானின் மகன் காற்றில் பறந்து கொண்டே இருந்தான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பல நாட்களுக்கு பிறகு அவன் வந்தான். அரண்மனையில் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனை விடுவித்தனர். ஆனால், அந்த இளவரசனை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதால், அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான்.

சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் கூறினார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனைக்கு சென்றான்.

முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக் கூறினான். மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்றுவிட்டான். யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது சொந்தமான பொருளை அவனே அடைந்து கொண்டான்.

நீதி :
நமது சொந்த பொருளை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

காரியதரிசி   -  செயலாளர்
ஞாபகம்    -   நினைவு
இலட்சணம்    -   அழகு
ஆராதனை   -    வழிபாடு
உற்சவம்  -    விழா

இன்றைய செய்திகள்

14.10.19

* வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு:  சத்யபிரதா சாகு அறிவிப்பு.

* டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளில் உள்ள நீர் தேங்கக்கூடிய இடங்கள் மற்றும் பொருட்களை சுத்தம் செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவை பாப் பிரான்சிஸ்  புனிதராக அறிவித்தார்.

* தொடரை வென்றது இந்தியா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

* ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில்
 வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி.

* மும்பையில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் சென்னை வீரர் பிரக்யானந்தா.



Today's Headlines

🌸The date for correction in voter list is extended upto November 18th announced Sathyaprabha Sahu.

🌸 As there is a spread of Dengue Fever the School Education Department commanded the school authorities to clean the school premises off all water stagnating places and objects.

🌸Title "Saint" is given to the Keralite Sister Mariam Thresia (passed away). In a function held at Vatican she was declared saint by Pope.

🌸 India won the test series against South Africa  by innings and 137 runs.

🌸 Indian Player Manju Rani won 48 Kg of Gold Medal in the world boxing competition held at Russia.

🌸In the Word Youngster's Chess competition Chennai Player Pirakyanantha won the Gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment