Pages

Thursday, October 24, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.10.19

திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:304

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.

விளக்கம்:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பழமொழி

Difficulties  give way to diligence.

 கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி

மனிதன் உடல் மற்றும் உளரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனது வாழ்வு சிறப்பாக அமையும். நலமான வாழ்விற்கு வழிகாட்டி சுத்தமும் சுகாதாரமும் தான்.......

நபிகள்

பொது அறிவு

1. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்? 

சமுத்திர குப்தர்

2. இந்தியாவில் முதன் முதலாக விலங்கியல் பூங்கா எங்கு துவங்கப்பட்டது ?

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர். (1855)

English words & meanings

Pathology - study of cause and effects of disease. நோய் குறித்த படிப்பு.

Pathogens - microbes that cause diseases. நோய் உண்டாக காரணமான நுண்ணுயிர்கள்.

ஆரோக்ய வாழ்வு

எலுமிச்சை சாறு உமிழ்நீர் அதிகமாக சுரக்க வைப்பதால் வறண்டு வாய் பிரச்சினை சரியாகும். எலுமிச்சை தூண்டுவதன் மூலம் தலைசுற்றல் மற்றும் மயக்கத்தை சரி செய்யலாம்.

Some important  abbreviations for students

Dec. - December.

d. - died

நீதிக்கதை

சாகாத வரம்

வையாபுரி பட்டினம் என்ற நகரத்தில் முத்து வியாபாரி மாணிக்கம் என்பவர் வாழ்ந்து வந்தார். மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் இருக்கும்.

மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்தான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டனர்.

மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று நினைத்து, சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் இறந்துவிட்டார்.

ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டு அண்ணன் முத்துவை கொல்ல நினைத்தனர். ஒரு நாள் முத்து வெளிநாட்டிலிருந்து வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

முத்து சரி என்றான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கும் போது தம்பிகள் அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்.

என்ன நடந்தது? என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று வரமளித்தார் கடவுள்.

முத்து வீட்டிற்கு வந்தான். ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். என்ன நடந்தது என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தைப் பற்றி கூறினான்.

தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டு ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.

அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தபோது, அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். உங்களுக்கு என்ன நடந்தது? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப்போட்டதாக கூறினர்.

கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும் என்றான் ரத்தினம். நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும் என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 ஆண்டு என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.

கடவுள் பார்த்து நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம் என்றார் கடவுள். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் இருவரும்.

கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும் என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நீரில் மூழ்கி இருந்தனர். கடவுள் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமையம் ரத்தினமும், வைரமும் பிணமாக நீரில் மிதந்தனர்.

நீதி :
பேராசை உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை அடைவார்கள்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

இந்தியப்பெருங்கடல்  உலகின்
மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் ஆசியா, மேற்கில் ஆப்பிரிக்கா, கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிக்பெருங்கடல்,
ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.

பாரம்பரிய விளையாட்டு - 6

பூ பறிக்க வருகிறோம்

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

25.10.19

* உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார கால அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை.

* கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி.

*  இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.

* தீபாவளி காரணமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வாகனங்களின் அதிகரிப்பால்  சென்னை -  வண்டலூர் இடையிலான சாலைகள் இன்றே கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்துள்ளன.

* தமிழகம் முழுவதும் நாளை முதல் அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக்.

* சீனாவின் வுஹான் நகரில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் ஆனந்தன் குணசேகரன் ஆண்கள் 100 மீட்டர் ஐடி1 பிரிவிலும், ஆண்கள் 400 மீட்டர் ஐடி1 பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

Today's Headlines

🌸 Tamil Nadu State Election Commission requests Supreme Court for 4 weeks' time to hold local elections.

 🌸 Central Government gave permission to conduct excavations in Adichchanallur, Kodumunal and Sivagalai.

 🌸 A bunker used by Hitler's forces during World War II will be converted into a luxury hotel.

 🌸Roads between Chennai and Vandalur have been hit by heavy traffic on the outskirts of Chennai due to Diwali.

 🌸 Doctor strike starts from tomorrow in tamilnadu

 🌸Anandan Gunasekaran,  of India who was the differently abled person won gold medals in the men's 100 meters  IT1 category and in men's 400 meters IT1 category held in world military games competition in Wuhaan.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment