Pages

Sunday, August 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2024

  

விக்ரம் சாராபாய்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:450

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

பழமொழி :

அழ அழச் சொல்லுவர் தம்மக்கள், சிரிக்க சிரிக்கச் சொல்லுவர் பிறர்

A friend’s frown is better than a foe’s smile

இரண்டொழுக்க பண்புகள் :  

*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும்  எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன். ‌‌

*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.

பொன்மொழி :

நம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது ---மைக் மர்டாக்

பொது அறிவு : 

1. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?

விடை: தொல்காப்பியம்

2. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?

விடை: கருவிழி

English words & meanings :

 Antibiotics : நோய் எதிர்ப்பு மருந்து.

 Antiseptic : நச்சுக்கிருமித் தடுப்பு மருந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

அற்புதமான விளைச்சலைத் தருவிக்கிறது என்பதை உணர்ந்து தான், முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை உண்டாக்கினார்கள்.

ஆகஸ்ட் 12

விக்கிரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்


விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhaiஆகஸ்ட் 121919 – டிசம்பர் 301971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்



உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய நூலக தினம். 



ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.

நீதிக்கதை

 அன்பு


ஒரு பள்ளியில், ஆசிரியர் நான்கு மாணவிகளை  அழைத்து, "உங்கள் சுற்றுப்புறத்தில் அன்பை வெளிப்படுத்தும் ஏதேனும் ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று அனுப்பி வைத்தார்.


 திரும்பி வந்த மூன்று மாணவிகளில்,ஒரு மாணவியின் கையில் அழகான மலர், மற்றொரு மாணவியின் கையில் வண்ணத்துப்பூச்சி,  மற்றொரு மாணவியின் கையில் குஞ்சு பறவை போன்றவற்றை  தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.


 நான்காவதாக வந்த  மாணவியின் கையில் எதுவும் இல்லை.அவரைப் பார்த்து ஆசிரியர்," நீ எதுவும் கொண்டு வரவில்லையா"? என்று கேட்டார். 


அதற்கு அந்த மாணவி," நானும் வெளியில் சென்ற போது மலரை பார்த்தேன். ஆனால் அது அழகாக இருந்ததால்  செடியிடமே இருக்கட்டும் என விட்டு விட்டேன்.வண்ணத்துப் பூச்சியையும் பார்த்தேன்  அது சுதந்திரமாக பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். சின்ன  குஞ்சு பறவையையும் பார்த்தேன். ஆனால் அதன் தாய் தேடுமே என்று விட்டுவிட்டேன்" என்று கூறினார்.


அந்த மாணவியை அழைத்து பாராட்டிய ஆசிரியர்  "இதுதான் அன்பு" என்று கூறினார்.


 நீதி: உங்களால் உலகிற்கு எதையாவது இலவசமாக கொடுக்க முடியும் என்றால் அன்பை கொடுங்கள். ஏனென்றால், உலகம் அன்புக்கு தான்  ஏங்கிக் கிடைக்கிறது.

இன்றைய செய்திகள்

12.08.2024

* நாடு முழுவதும், அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

* தமிழகத்தில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

* தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்திய ராக்கெட்டுகள் குறித்த சிறப்பு வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.

* கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா  கோலாகலமாக நிறைவு பெற்றது.

* நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி; காலிறுதிக்கு முன்னேறினார் ஜெர்மனியின் ஸ்வெரேவ்.

Today's Headlines

* The Election Commission of India has directed state Chief Electoral Officers to carry out electoral roll revision work from October 29 to November 28 across the country.

 * Minister M. Subramanian said that steps have been taken to fill 2,553 doctor posts in Tamil Nadu.

 * Ordinance issued to allocate Rs 38 crore to provide cash benefits to Tamil Nadu transport pensioners.

 * ISRO has released a special video on Indian rockets on the occasion of National Space Day.

 * The last 16 days of the Paris Olympic Festival ended with a bang.

 * National Bank Open Tennis Tournament;  Germany's Zverev advanced to the quarter-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment