Pages

Friday, August 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2024






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:449

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை.

பொருள் :முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

பழமொழி :

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

Everyone rakes the embers to bake his own cake

இரண்டொழுக்க பண்புகள் : 

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.

பொன்மொழி :

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் . அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு"----ஹிட்லர்

பொது அறிவு : 

1.ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் (சல்ஃபர்)

2. "தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?

விடை: ஆஸ்திரேலியா

English words & meanings :

 Animation : உயிரோவியம். 

 Animosity : பகைமை / கடும் வெறுப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

பூமிக்கு வேண்டிய சூரியக் கதிர்களின் சக்தியும் மிகச் சரியாக கிடைக்கும். இதனால் மண் செழிப்பதோடு, விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை மகிழ்ச்சியாக்குகிறது

நீதிக்கதை

 முயல்களும் தவளைகளும் 


ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 

 திடீரென்று கோடைகாலம் வந்தது. கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 

 முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன. 

அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல்,உணவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. 

“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 

அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று 

சொன்னது.

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே மேல்.நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து விடுகிறேன்” என்று சொன்னது. 

அப்போது மற்றொரு  முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன. 

இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. “இந்தத் தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன. 

நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள், அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் என்று  எண்ணினோம். ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர்” என்று  தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது ஒரு முயல் சொன்னது, “நாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம். 

இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக் கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.

நீதி : வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.

இன்றைய செய்திகள்

10.08.2024

* அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

* “இயந்திரத்தனமாக செயல்பட்டு சொத்துகளை பதிவு செய்ய மறுக்கக் கூடாது” - சார் பதிவாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* வயநாடு நிவாரண முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி: கேரள அரசு அறிவிப்பு.

* வங்கதேசம்: நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு.

* கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு.

* பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து.

Today's Headlines

* The Chief Minister launched the Tamil Puthalvan Scheme at the Government Arts College, Coimbatore, which provides a monthly grant of Rs.1000

 * "Do not refuse to register assets as a machine" - Court ordered the Sub Registrars.

 * Rs.10,000 per family in Wayanad Relief Camps: Kerala Govt Announced.

 * Bangladesh: Nobel Laureate Muhammad Yunus takes oath as chief of the Interim Government.

 * International cricket stadium in Coimbatore: Tamil Nadu government has called for tenders to prepare the project report.

 * Paris Olympics: Netherlands wins gold medal in hockey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment