Pages

Monday, July 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2024

   





திருக்குறள்: 

பால் :பொருட் பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்: கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்
உள்ள வறுமையை விட மிக்க துன்பம் செய்வதாகும்.

பழமொழி :

Calm before the storm. stoop to conquer.

புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.

இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

" பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"----விவேகானந்தர் 

பொது அறிவு : 

1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

English words & meanings :

 
avarice-பண பேராசை

greed- பேராசை

வேளாண்மையும் வாழ்வும் : 

ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றனர்.


ஜூலை 02 

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.

நீதிக்கதை

 விட்டுக் கொடுத்தல் 


 பழங்காலத்தில் வேடர்கள் குரங்குகளை பிடிக்க ஒரு யுக்தியை  கையாண்டனர்

குறுகிய வாய்ப்பகுதி கொண்ட கனமான ஒரு கண்ணாடி ஜாடியில் குரங்குகளுக்கு பிடித்த உணவை அடைத்து குரங்குகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைத்து விடுவார்கள்

 குரங்குகள் அதை பார்த்ததும் ஜாடியில் கையை விட்டு உணவை எடுக்க முயலும்.ஆனால் கை வெளியே வராது. அந்தக் கனமான கண்ணாடி ஜாடியை தூக்கவும் முடியாது.

 குரங்குகளும் விடாப்பிடியாக உணவை கையில் வைத்துக் கொண்டே கையை எடுக்க முயலும். ஆனால் உணவை விட்டுக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம் என்பது அறியாமல் உணவை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கும். கடைசியில் வேடனிடம் மாட்டிக் கொள்ளும்.

 நம் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும்  எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் கடந்து செல்ல வேண்டும் ,எந்த இடத்தில் நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்பதை அறிந்து  செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

02.07.2024

* தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்.

* சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 52 மருந்துகள் தரமற்று இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 * 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

* வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியது ஆஸ்திரேலியா.

* மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி.

* கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Secretaries of important departments of the Tamil Nadu government have been transferred.  16 IAS officers including Water Resources and Forest Secretaries have been transferred.

* New Guideline Values for properties in Tamil Nadu other than Vikravandi were implemented.

*  The Central Drug Quality Control Board has revealed that 52 medicines for diseases such as cold and high blood pressure were of substandard quality.

 * 3 new criminal laws came into effect across the country from yesterday.

 * Australia doubles visa fees for foreign students.

 * Women's Test: India won the women's test series with South Africa.

 * European Football Championship: Germany beats Denmark and has entered quarter-finals.

 * Grand Slam Wimbledon tennis started yesterday.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment