Pages

Sunday, June 30, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2024

  

கல்பனா சாவ்லா




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறல் எண்:407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு,
மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.


பழமொழி :

Blessed are the meek: for they shall inherit the earth.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும்"---ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன்

English words & meanings :

 callous-கடுமையான, heartless- இரக்கமற்ற

வேளாண்மையும் வாழ்வும் : 

இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.

ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.


கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை


நீதிக்கதை

 சமயோஜித  புத்தி

முன் ஒரு  காலத்தில் புகழ்பெற்ற தலைவர் ஒருவர் இருந்தார். 

 தந்திரமான போர் குணம் கொண்டவர். ஒரு நாள் ஒரு மாநாட்டை முடித்துக் கொண்டு

 தனது  பாதுகாப்பு  படையுடன் நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

வழியில்  பயணக் களைப்பு தீர ஓரிடத்தில் முகாமிட எண்ணினர். கொஞ்சம் வீரர்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு மீதி பாதுகாப்பு படைவீரர்களை  வேறொரு இடத்தில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.

 தலைவர் பாதுகாப்பு படை இன்றி இருப்பதை அறிந்த  அவரின் எதிரிகள் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் சூழ அவருடைய இருப்பிடம் நோக்கி வர தொடங்கினர் 

 நடு ராத்திரியில் அவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த தகவல் அவருக்கு கிடைத்தது. குறைவான எண்ணிக்கையில் உள்ள படைவீரர்களைக் கொண்டு அவர்களை சமாளிக்க இயலாது என்று யோசித்தார்.

 உடனே அவர் தம் வீரர்களுக்கு கட்டளையிட அவர்கள் அந்த இடத்தில் எதுவும்  இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு அவர்களும் மறைவான இடங்களில் தனித்தனியாக மறைந்து கொண்டனர்.

 தலைவரும் தன்னுடைய பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி விட்டு அங்கே அமர்ந்து வீணை வாசிக்க  தொடங்கினார்.  

சற்று நேரத்தில் அங்கே வந்த எதிரி நாட்டுப் படைகள் அவர் தனியே வீணை வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். 

எதிரி நாட்டு படையின்   தலைவர் இவர் சாதாரணமான முறையில் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்மை பிடிக்க வேறு ஏதேனும் தந்திர வழியில் படை வீரர்களை மறைத்து வைத்திருப்பாரோ என்று யோசித்தார். 

எனவே படைகளுடன் பின்வாங்கினார்.

எப்போதும் பிரச்சினையை கண்டு பயப்படாமல்  சமயோஜித  புத்திக்கொண்டு  தீர்க்க வேண்டும்

இன்றைய செய்திகள்

01.07.2024

# வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்: 133 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்.

# சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.56கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

# தமிழக காவல் துறையினருக்கு பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

# கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு:அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு  வெளியிட்ட அறிக்கை தகவல்.

# சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்.

# சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவிப்பு.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி.

# ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

# Agriculture and Horticulture Officers are appointed: Chief Minister of Tamil Nadu issued work orders to 133 people.

 # New and latest medical equipment which  costs  Rs.14.56 crore was brought to public use in Rajiv Gandhi Government  Hospital, Chennai.

#  The chief minister said that the gratuity paid to the Tamil Nadu Police Department in case of loss of life, loss of limb or injury while on duty will be increased.

 # 62 crore people affected by extreme heat wave in India: According to the report released by the team of scientists of the United States' National Center for Climate Research.

# There is Fuel Leak in the Space Shuttle : There is a Problem for Sunitha Williams' Returning to Earth

 # International T20 cricket: Virat, Rohit and Jadeja announce retirement

# European Football Championship: Switzerland beat Italy to reach the quarter-finals.

 # Eastbourne tennis: USA's Taylor Brits advances to finals
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment