Pages

Tuesday, March 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2024

  

யூரி அலெக்சியேவிச் ககாரின்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம்:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

பழமொழி :

Set a thief to catch a thief

முள்ளை முள்ளால் எடு

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

இந்த உலகில் நிகரில்லாத செல்வம் தன்னம்பிக்கையே.
- ஔவையார்.

பொது அறிவு : 

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டோன் பிஷ் 

English words & meanings :

 Adjourn - postpone;ஒத்திவைக்க.
 authentic - real; உண்மையான.

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை: சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarinஉருசியம்Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 சிநேகமாக்கிக்கொள்ளத் தக்கவர்களை ஆராயும் திறம்.


ஒரு மூடன் ஒரு வணிகருடனே கூடிக்கொண்டு சிநேகமாக இருவரும் பயணம் பண்ணினார்கள். பண்ணும்போது இரவு வந்துவிட்டதால் அந்த

மூடன் வழியில் படுத்துக்கொண்டான். அப்பொழுது அந்த வணிகர் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் மறைவில் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த வழியிலே போகிற கள்வர் காலிலே இந்தமூடன் கால் பட்டது. ஒரு கள்வன், "இது என்ன? கட்டை போல் இருக்கிறது" என்றான். அம்மூடன் கோபங் கொண்டு "டேய் மடையா!, உன் வீட்டுக் கட்டை பணம் முடித்துக்கொண்டு இருக்குமா?" என்றான். கள்வர் அவனை உதைத்து அவனிடம் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றார்கள். போம் போது இந்தப்பணம் நல்லதோ? கெட்டதோ? என்றார்கள். அவன் அதைக்கேட்டு நல்லது, கெட்டது என்று அறியும் பொருட்டு  வணிகர் மரத்தடியில் இருக்கிறார் என்று அவரிடம்  ஓடி வணிகரை எழுப்பினான். அக் கள்வர்கள் வணிகரிடம் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு உதைத்துச் சென்றார்கள். அப்போது வணிகர் மூடனைப்பார்த்து 'அப்பா ! எனக் குத்துணைவேண்டாம். நீ விரும்பிய இடத்திற்குப் போ!' என்று அவன் நட்பை வெறுத்து தனியே சென்றான். வள்ளுவரும் "மூடன் நட்பை விடுதல் இலாபம்" என்று  கூறியுள்ளார். 


ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

இன்றைய செய்திகள்

27.03.2024

*மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் தலைவரானார், ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவன் பவன் தவுலுரி.

*இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை;  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இணைப்பு நடவடிக்கை; 5வது புலிகள் காப்பகமான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை.

*கேரள மாநிலம்: பழங்குடியின சமூகத்தினர் 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்; ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

*தமிழ்நாட்டைப் போல இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தொடங்கி வைத்தார்.

*மியாமி ஓபன் டென்னிஸ்: போப்பண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

*Pawan Dauluri, an IIT Madras alumnus, heads Microsoft Windows and Surface.

  *For the first time in India, the Forest Department purchased private forests;  this action was taken due to heavy movements of wild animals.  5th Tiger Reserve in Srivilliputhur Meghamalai.

  *Kerala State: 216 people from the tribal community got married at the same stage;  it is also featured in the Asian Book of Records.

  * Breakfast program for school students in Sri Lanka like Tamil Nadu.  President Ranil Wickremesinghe inaugurated the event.

  *Miami Open tennis: Poppanna pair advance to quarterfinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment