Pages

Monday, March 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2024

  

இசை மேதை பீத்தோவன்




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

விளக்கம்:

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.


பழமொழி :

Self help is the best help

தன் கையே தனக்கு உதவி

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது
போன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும் நிறுத்தினால் பின்னுக்கு அடித்துத் தள்ளும்.

பொது அறிவு : 

1. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் யார்?.

 பி.டி உஷா

 2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

 ஞானபீட விருது.

English words & meanings :

 Zone - an area or region distinguished from adjacent parts மண்டலம், குறிப்பிட்ட பகுதி 
Zoom in - maximize  பெரிதாக்கு

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை :புளிச்சக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven/ˈlʊdvɪɡ væn ˈbˌtvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை

 இறைமாட்சி

அரசனது நற்குண நற்செய்கைகள்

கரிகாலன், சிறு வயதில் தன் மாமனாகிய இரும் பிடர்த்தலையார் என்ற புலவர் பாதுகாப்பில்

வளர்ந்து வந்தான். புலவர் இவனுக்கு வேண்டிய அறிவு நூல்களை எல்லாம் கற்பித்து இவனைக் கல்வி கேள்விகளில் வல்லவனாகச் செய்தார். இதனால் இவன் சோழ நாட்டிற்கு அரசனாக வந்ததும், மக்கள் எல்லாரிடமும் அன்பு மொழிகள் பேசி மகிழ்ந்ததோடு அவர்கள் விரும்பியதையும் கொடுத்துச் சிறந்தவனாக விளங்கினான். இவ்விதம் விளங்கியதனால் இந்த அரசன், "காவிரிக்குக் கரை கட்ட வேண்டும்" என்று விரும்பினான். இதை அறிந்த மக்கள் அரசன் கருத்துப்படி நடப்பதே நம் கடமை என்று பல ஆண்டுகள் செய்து முடிக்க வேண்டிய கரையைச் சில நாட்களில் செய்து முடித்து மன்னனுக்குப் புகழை உண்டாக்கினர். இவ்விதம் மக்கள் வேறு; அரசன் வேறு; என்று இல்லாமல் ஒற்றுமை மனப்பான்மையோடு புகழ் ஓங்கச் சோழன் ஆட்சிசெய்து வந்தான். வள்ளுவரும், இன்சொல்லோடு கொடுத்து அளிக்கும் அரசனுக்கு உலகோர் அவன் நினைத்தவற்றைக் கொடுத்துப் புகழை உண்டாக்குவர்" என்று கூறி யுள்ளார்.

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத்

தான்கண்ட அனைத்து இவ்வுலகு.

இன்றைய செய்திகள்

26.03.2024


*பிரேசிலில் கடும் வெள்ள பாதிப்பு ; 20 பேர் பலி; ஏராளமான வீடுகள் இடிந்து சேதம்.

*இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது.

*2025 பொங்கலுக்கு அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு; ஜல்லிக்கட்டு ஆர்வலர் வி கே டி பாலன்.

*தமிழகத்தில் நான்கு நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம்.

*சண்டிகர்: ஐ. டி. எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இரண்டாவது இடம் பிடித்தார்.

Today's Headlines

* Severe flooding in Brazil;  20 people died;  Many houses were damaged.

 *Class 10th Public exam starts today.

 *Women's jallikattu at Alankanallur for 2025 Pongal;  Jallikattu enthusiast VK D Balan.

 *The impact of heat will increase in Tamil Nadu for four days;  Meteorological Centre.

 * Chandigarh: 
I. D. F; in tennis singles India's Ramkumar Ramanathan ranked  second .
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment