Pages

Sunday, August 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2022

 திருக்குறள் :

அதிகாரம்/Chapter: உழவு / Farming

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள்; 

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது


பழமொழி :

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன். 

2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்

பொன்மொழி :

நல்லதாக நடந்தவைகளை எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும்.

பொது அறிவு :

1.எப்படிப்பட்ட நிலத்தில் தென்னை செழிப்பாக வளரும்? 

 கடற்கரையில் .

 2.சூரிய ஒளியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

 ஏழு.

English words & meanings :

an·ti·par·a·sit·ic - Destroying or inhibiting the growth and reproduction of parasites. Adjective. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

அத்திப்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. குறிப்பாக ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொண்டு வரும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்

NMMS Q 49:

a' எனும் எண், அதே எண் ஆல் பெருக்கப்படும் போது அந்த பெருக்கற்பலன் _________ எனப்படும்.

 விடை: வர்க்கம்

ஆகஸ்ட்  29


தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்




தியான் சந்த் (Dhyan Chandஇந்திध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 291905 – இறப்பு:திசம்பர் 31979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை

துன்பம்

பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை ஜன்னல் அருகில். இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

ஜன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் சொன்னார்.. உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..! கவலைப்படாதே நண்பா.. நான் ஜன்னல் வழியாக என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் ஜன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா....ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி... நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்... ஜன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்... ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலையில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடி கொண்டிருக்கிறார்கள். மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்... மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்...! 

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்... ஒருநாள் ஜன்னல் நோயாளி செத்துப்போனார்... மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுதுபோகும் என்று எண்ணியவாறே... தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே நோக்க... அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை...! அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்... செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்... நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது... புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..! 

நீதி :
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்களை குறைக்கூறாதீர்கள்.

இன்றைய செய்திகள்

29.08.22

* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூருக்கு நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும்.

* பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ சீட் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு.

* அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 187 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  தகர்க்கப்பட்டது.

* சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை.

* இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் - யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை.

* புறக்கோள் ஒன்றில் CO2 இருப்பதைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

* உலக ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை.

* உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி பதக்கத்தை உறுதி செய்து சாதனை.

Today's Headlines

*Heavy rains in Cauvery catchment areas - Mettur will increase water flow to 1.20 lakh cubic feet.

 * High Court directs allotment of medical seat to Prime Minister's Rashtriya Bala Puraskar awardee.

* Preference for differently-abled persons to run roadside pushcart shops - Ordinance issued.

 * An allocation of Rs.113.74 crore has been made for the rehabilitation of 187 water bodies in Tamil Nadu under the Amruth 2.0 project.

 * A 32-storey modern twin-towered building in Noida near Delhi was demolished following a Supreme Court order.

 * Indian Army moves to use light artillery vehicle, drones in mountainous areas of Chinese border.

 * Children sleeping hungry in Sri Lanka - UNICEF South Asia Director Angam.

 *The James Webb telescope discovered the presence of CO2 in an exoplanet.

* India's Lindhoi Chanambam wins gold medal in World Judo Championship

 *World Badminton Championship: India's Shadwick-Chirag pair secure medal and it was a record
 
 Prepared by

Covai women ICT_போதிமரம் 

No comments:

Post a Comment