Pages

Thursday, August 25, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள் :
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

பழமொழி :

The pen is mightier than the sword.

வாளினும் வலியது எழுதுகோல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். - அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1.இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? 

அக்னி. 

2. தொழில் புரட்சி முதல் முதலில் ஆரம்பித்த நாடு எது? 

இங்கிலாந்து.

English words & meanings :

zo·og·ra·phy - The biological description of animals and their habitats. noun. வெவ்வேறு நில இயல் சூழ்நிலைகளில் வாழும் உயிரினங்கள் பற்றிய ஆய்வு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சாத்துக்குடி

சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

ஆகஸ்ட்  26


அன்னை தெரேசா  அவர்களின் பிறந்தநாள்





அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.  1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும்1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ்தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

இன்றைய செய்திகள்

26.08.22

* தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படவுள்ளது.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.

* இந்தியாவிலேலய சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான அவுட்லுக் டிராவேர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.

* FIFA விதியின் படி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும் 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் தடை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* உலக பேட்மிண்டன் போட்டி: 2வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

Today's Headlines

 * The Union Government has decided to increase customs duty in 28 customs booths in Tamil Nadu from September 1.  Accordingly, the toll for cars, vans, and jeeps will be increased by Rs 5 and for trucks, buses, and multi-axle vehicles up to Rs 150.

 * Tamil Nadu will receive heavy rain for 4 days - Meteorological Center warns.

 * Tamil Nadu won the Outlook Traverse Award for Best Hill/Mountain Views in India.

 * FIFA has ordered the postponement of the election which was scheduled to be held on the 28th by one week to facilitate the conduct of the election as per the rules.  India's ban is expected to be lifted soon.

 * World Badminton Championship: Saina Nehwal lost in the 2nd round
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment