Pages

Thursday, April 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.04.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: கள் உண்ணாமை

குறள் : 925

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்

பழமொழி :

A brave man may fall, but he cannot yield.

வீழ்ந்தாலும் வீரன் அடி பணிய மாட்டான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.நன்மை எ‌ன்றாலு‌ம் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன். 

2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன் 

பொன்மொழி :

பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.___ நபிகள் நாயகம்

பொது அறிவு :

1. மெரினா கடற்கரைக்கு "மெரினா " என்று பெயர் சூட்டியவர் யார்? 

கிராண்ட் டஃப். 

2. இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றவர் யார்? 

ஆர்யா ராஜேந்திரன்.

(கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராக தனது 21 ஆம் அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.)

English words & meanings :

minuscule - extremely small, மிகமிகச் சிறிதான, 

microcosm-a small model of some thing large, நுண்ணிய மாதிரி

ஆரோக்ய வாழ்வு :

கரும்பு சாறு உங்கள் எனர்ஜியை அதிகரிக்கவும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், UTI தொற்றுகளை தடுக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். * இது மஞ்சள் காமாலை நோயை விரைவாக குணமடைய உதவுகிறது. * பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கரும்பு சாறு உதவுகிறது.கரும்பு சாற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய உள்ளன. இவை உடலில் தொற்று நோயை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் மஞ்சள் காமாலைக்கு ஒரு தீர்வாக கரும்பு சாற்றை சொல்லுகின்றனர்.

கணினி யுகம் :

Ctrl + 9 - Hide row. 

Shift + Ctrl + : - Display time

ஏப்ரல் 22


புவி நாள்




புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


நீதிக்கதை

அரசன் கண்ட கனவு

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒருநாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடிஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.

இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கைவாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப்பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார். 

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள். அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம்.

நீதி :
பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்

இன்றைய செய்திகள்

22.04.22

💫தமிழகத்தின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி, சென்னை அருகே விளையாட்டு நகரம் ஆகியவற்றை அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

💫கொடைக்கானல் தனியார் நிறுவன வளாகத்தில் பாதரசம் அகற்றும் பணியை மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

💫தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்.

💫பயன்பாடற்ற கடற்படை கப்பலை பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

💫அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்திய வம்சாவளி பெண்.

💫ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு 5 வெண்கலப் பதக்கங்கள்.

💫சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி.

Today's Headlines

💫Chief Minister Stalin has said that the Tamil Nadu government is taking all possible steps to set up an Olympic academy in four regions of Tamil Nadu and a sports city near Chennai 

 💫The National Green Tribunal has ordered that the removal of mercury at the Kodaikanal private company premises should be carried out under the guidance of the Central and State Pollution Control Boards.

 💫Chance of light rain in one or two places in Tamil Nadu for the next 4 days information by Director of
 Chennai Meteorological Center  

 💫The Indian Navy has said that the BrahMos missile hit the unused naval vessel accurately and the test was successful.

 💫A woman of Indian descent becomes a security adviser to US Vice President Kamala Harris.

 💫Asian Wrestling Championship: India won 5 bronze medals.

 💫Santosh Cup Football Series;  Punjab had a tremendous victory.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment