Pages

Wednesday, April 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.04.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: கள் உண்ணாமை

குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

பழமொழி :

Better wear out than rust out.

துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது நல்லது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.நன்மை எ‌ன்றாலு‌ம் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன். 

2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன் 

பொன்மொழி :

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்._____அப்துல் கலாம்

பொது அறிவு :

1.ஐந்தாண்டு திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய நாடு எது? 

சோவியத் ரஷ்யா.

 2. இந்தியாவில் அதிக வனப்பகுதி உள்ள மாநிலம் எது?

 மத்திய பிரதேசம்.  

English words & meanings :

litigate - to take legal action in a court of law.
வழக்காடு: 

listless - tired and without energy, சோர்வுற்ற மற்றும் ஆற்றல் இழந்த

ஆரோக்ய வாழ்வு :




ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது. 100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது.ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.

கணினி யுகம் :

Ctrl +; - Display date. 

Ctrl + 1 - Format box

நீதிக்கதை

அன்பை அடைக்க கதவு உண்டோ?

ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 

அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். 

அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன். 

மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள்

21.04.22

🔶கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🔶தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

🔶பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. அவர்களின் விருப்பங்களை அறிந்து வழிகாட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

🔶இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நெருக்கடி: வரலாறு காணாத மின்வெட்டு; நிலக்கரி வாங்க பணமில்லை.

🔶ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

🔶சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; ஒடிசா மற்றும் சர்வீசஸ் அணிகள் அபார வெற்றி.

Today's Headlines

🔶It is mandatory for people to wear a mask when going to public places to protect themselves from corona infection.  The government is not exempted people from that.  The Minister of Medicine and Public Welfare has said that the only exemption is the penalty for not wearing the mask.

🔶 There are 1.10 lakh vacancies in Polytechnic Colleges in Tamil Nadu.  Minister Ponmudi said. He also said that the interest of students to join polytechnic colleges has decreased.

 🔶Parents should not impose their dreams on children.  Chief minister Stalin advised them to know and guide their preferences.

🔶 Crisis in Pakistan following Sri Lanka: Unprecedented power outage;  no money to buy coal.

 🔶India won 3 bronze medals in a single day at the Asian Wrestling Championships.

🔶 Santosh Cup Football Series;  Odisha and Services won by a huge margin.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment