Pages

Wednesday, March 23, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.03.22

திருக்குறள் :

அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம்:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

பழமொழி :


Know when to keep quiet.
சிறு நுணலும் தன் வாயால் கெடும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

சொற்களில் வலிமையை உணர்ந்தால் யாரிடமும் வார்த்தைகளை விடமாட்டீர்கள்____ அன்னை தெரேசா

பொது அறிவு :

1.உயிர் காக்கும் உன்னத உலோகம் என்றழைக்கப்படுவது எது? 

ரேடியம். 

2. முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் யார்? 

மேரிகியூரி.

English words & meanings :


Translate - express from one language to another language, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்த்தல், 

saddle - a seat kept on a horse or other animals for riding - விலங்குகள் மீது சவாரி செய்பவர் அமரும் இருக்கை 

ஆரோக்ய வாழ்வு :

மீன்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புகள் உள்ளன. மற்றும் இதில் உயர் தரமான புரதங்கள் உள்ளன. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்

டி மற்றும் வைட்டமின் பி2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மீன்கள் இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் மிகவும் நன்மை பயக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மன சோர்வை நீக்குகிறது. மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது ஒரு நபரின் மனநிலையை மாற்றி மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது.





கணினி யுகம் :


Ctrl + plus key - Automatically adjust widths of all columns in all windows explorer. 

 Alt + Enter - Open properties window of selected icon

மார்ச் 24


உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.

நீதிக்கதை


கடவுள் கொடுத்த வரம்

அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.

ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.

அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.

இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.

இன்றைய செய்திகள்

24.03.22

💫 தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

💫 இன்னும் 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் நாட்டின் தெற்குப்பகுதியில் அனைத்து விமானங்களையும் இயக்கும் வகையில் பெரிய விமானத்தளமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

💫 தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது: பேரவையில் பொன்முடி திட்டவட்டம்.

💫 நாட்டில் நீடித்து வரும் கரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்றும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

💫 தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22-ம் நிதியாண்டில் ரூ.80கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

💫 கீவ்: உக்ரைனின் மேரிபோல் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவு, குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது.

💫 கடும் பொருளாதார நெருக்கடி | இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பேப்பர் வாங்க முடியாததால் தேர்வுகள் நிறுத்தம்.

💫 ஐ.பி.எல் போட்டியை நேரில் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி.

 💫 புரோ ஹாக்கி லீக்: அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

Today's Headlines

💫 The Central Government has stated that the construction of the 5th and 6th reactors with a capacity of 1000 MW each is underway at the Kudankulam Atomic Power Station in Tamil Nadu.

 💫 In the next 10 years, the Ramanathapuram District Uchchipulli INS Naval Air Station is in the process of being transformed into a major air base operating in the southern part of the country, said Deputy Admiral Biswajit Dasgupta, Commander in Eastern Naval Command.

 💫 Entrance examination for undergraduate courses will not be held in Tamil Nadu: Higher education minister Ponmudi declared in the assembly.

 💫 The federal government has said that the country's ongoing corona restrictions will end on March 31, but that people will still have to wear masks and observe personal distance .

💫  The Central Government has stated that Rs. 80 crore has been allocated for the benefit of Sri Lankan Tamils ​​living in Tamil Nadu camps in the financial year 2021-22.

 💫 Kiev: About 3 lakh people in the Ukrainian city of Marypol are without food and water.  The Ukrainian government has demanded that Russia allow them to leave the city.

 💫 Severe economic crisis |  All party meeting in Sri Lanka today;  Examinations stopped because people can't buy paper.

 💫 25% of fans allowed to watch IPL match live.

 💫 Pro Hockey League: Indian team wins over Argentina.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment