Pages

Tuesday, March 22, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.03.22

  திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

பொருள்:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்

பழமொழி :

After a dinner sit a while. 

உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

ஏமாற்றம் தோல்வியின் முதல் படியில்லை அது வெற்றியின் அத்திவாரம்.”_____கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு :

1.உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம் எது? 

நீலத்திமிங்கலம். 

2. கார்கள் அதிகம் உள்ள நாடு எது? 

நியூயார்க்.

English words & meanings :


Miniature - very small of it's kind, ஒரு பொருளின் சிறிய வடிவம், 

sharpen - make a thing sharp, கூர்மையாக்குதல்

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூவை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைப்பூ ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும். வாழைப்பூவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரச்சத்து, முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

கணினி யுகம் :

Alt + F4 - Close current open program.

 Ctrl + F4 - Close window in program 

மார்ச் 23


உலக வானிலை நாள் (World Meteorological Day);



உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

பகத் சிங்,  சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார், 

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங்ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்



பகத் சிங் (Bhagat Singhசெப்டம்பர் 281907[1] – மார்ச் 231931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.[4].

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.[6] பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.


சிவராம் ஹரி ராஜகுரு அல்லது ராஜகுரு (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), பகத் சிங்சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து, பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 1928ஆம் ஆண்டில் லாகூரில், பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், பகத் சிங்சுக்தேவ் ஆகியோர் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்கிலிடப்பட்டனர்.


சுக்தேவ் தபார் அல்லது சுக்தேவ் (15 மே 1907 - மார்ச் 23, 1931 (பஞ்சாபிਸੁਖਦੇਵ ਥਾਪਰ, سُکھدیو تھاپرபஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இந்திய விடுதலை போராளி. பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் லாலா லஜபத் ராய் என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடையக் கூட்டாளிகளான பகத்சிங்சிவராம் ராஜ்குரு போன்றோருடன் சேர்ந்து சான்டர்சு பதில் கொலை செய்ததற்காக அதிகம் அறியப்பட்டவர்.

இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.

நீதிக்கதை

இரண்டு அணில்கள்

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.

அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்

23.03.22

❗மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர்  அடிக்கல் நாட்டினார்.

 ❗மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மார்க் மட்டும் போதாது; நுழைவுத் தேர்வு அவசியம்: யுஜிசி தகவல்.


சீனாவில் ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உலக கோப்பை; 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

நட்புறவு கால்பந்து போட்டி: இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதல்.

Today's Headlines

❗ The Tamil Nadu Legislative Assembly passed a unanimous resolution condemning the Karnataka government for allocating funds to build a new dam at Meghathattu.

  The Chief Minister laid the foundation stone for a multi-purpose specialty hospital to be built at a cost of Rs 230 crore at the Guindy King Institute campus.

 Plus 2 marks alone are no longer enough to enroll in central universities;  Entrance Exam Requur:  UGC Information.

  The city of Shenyang in China was hit hard by a sudden lockdown there yesterday.  The entire industrial city of Shenyang, home to about 90 million people, is sealed off.

   Women's World Cup;  India won by 110 runs.

  Friendly football match: Indian team clashes with Bahrain and Belarus respectively.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment