Pages

Sunday, March 20, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.22

 திருக்குறள் :

அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:189

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

விளக்கம்:

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

பழமொழி :

A little knowledge is a dangerous thing.


அரை வைத்தியம்  ஆபத்தில் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

கஷ்டங்கள் கவலைகள் உனக்கு மட்டும்தான் என்று புலம்பாதே..! இங்கு சந்தோசத்தை மட்டுமே அனுபவிக்கும் மனிதர்கள் எவரும் இல்லை

பொது அறிவு :

1. பாரதியார் "பாரதி" என்ற பட்டத்தை பெற்ற போது அவரின் வயது என்ன? 

11 வயது. 

2. வறுமை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

நவம்பர் 1.

English words & meanings :

Famine - scarcity of food, உணவு பஞ்சம், 

feminine - a word to describe a female, பெண்மை

ஆரோக்ய வாழ்வு :

வெள்ளரிக்காய் நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் உடையது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். கேன்சரை தடுக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும். உடல் எடையை குறைக்கும்.

கணினி யுகம் :

F2 - Rename selected icon. 

F3 - Start find from desktop

மார்ச் 21


பன்னாட்டு வன நாள் (International Day of Forests





பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.


உலகக் கவிதை நாள் (World Poetry Day

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) 


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.


நீதிக்கதை

பாசமுள்ள சிறுவன்

மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை. 

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை 

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். 

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. 

அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

நீதி :
அன்பால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

21.03.22

★பள்ளி பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதிலும் 276 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

★வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

★மாற்றுப் பயிர், ஊடுபயிர் மூலம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலர் அறிவித்துள்ளார்.

★இந்தியாவில் கரோனா பரவல் 4-வது அலைக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து.


★இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சலுகை விலையில் 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


★ஹைப்பர்சானிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.

★இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.

★பிரீமியர் லீக் கால்பந்து : அர்செனல் அணி வெற்றி.

Today's Headlines

 ★ Permission has been granted to 276 shops across Tamil Nadu to sell school textbooks.

 ★ The Meteorological Department has forecast showers in some parts of Tamil Nadu and Puthuvai today and tomorrow due to atmospheric circulation.

 ★ The Secretary, Department of Agriculture and Agrarian Welfare has announced that the budget has paved the way for increasing the income of farmers through alternative crops and intercropping.

 ★ Opportunity for the 4th wave of corona spread in India: Expert opinion.


 ★ It has been reported that Indian Oil Corporation has entered into an agreement with a Russian oil company to import 3 million barrels of crude oil at concessional prices.


 ★ Russia attacks Ukraine with hypersonic missile.

 ★ Indian Wells Tennis: Rafael Nadal advanced to the final.

 ★ Premier League football: Arsenal win.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment