Pages

Thursday, March 17, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.03.22

  திருக்குறள் :

அதிகாரம்:புறங்கூறாமை

திருக்குறள்:186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

விளக்கம்:

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

பழமொழி :

Don't judge a book by its cover.


 புறத்தோற்றம் கண்டு மயங்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.

 2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்

பொன்மொழி :

சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிப்போக ஒருமுறை நினைத்து விட்டால்! பிறகு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நீ மாறிக்கொண்டே போக வேண்டி இருக்கும்”

பொது அறிவு :

1. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் எது? 

மும்பை. 

2. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடு எது? 

இந்தியா.

English words & meanings :

Plead - make an emotional appeal, கெஞ்சுதல். 

Assemble - gather together in one place, ஒரே இடத்தில் கூடுதல்

ஆரோக்ய வாழ்வு :

தர்பூசணியின் தோல் மற்றும் சதை சிட்ரூலைன் என்ற அமினோ அமிலத்தால் நிரம்பியுள்ளது. இது ரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக தூண்டுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்தின் போது நம் உடலில் சேமிக்கப்படும் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும் .இதனால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர எடை குறையும். தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும்.




கணினி யுகம் :

Alt + Tab - Switch between open applications. 

Alt + print screen - Create screenshot for current program

நீதிக்கதை

எவ்வுயிரும் நம் உயிரே

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார். புன்னகை புரிந்தார்.

உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசிகூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.

சில நாட்கள் கழிந்தன. காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது. நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த நல்ல பாம்பு யாரையும் அலட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.

ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ.. சூ... எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர். அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது. டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.

நம்மைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா! என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.

அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம். ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு.

சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.

அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார். உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியதுதானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது.

ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள். நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன். உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள். சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே!

மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.

அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதேபோல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

இன்றைய செய்திகள்

18.03.22

🍁 மதுரை மாவட்டம், வில்லூர் அருகே சித்தூரில் 700 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் மற்றும் நடுகல் ஆகியவை தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

🍁20-ம் தேதி நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

🍁 நீலகிரியில் ஆண்டு முழுவதும் மலைக் காய்கறி பயிர்கள் தொடர்ந்து பயிரிடப்படுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க பயிர் சுழற்சி முறையில் கோதுமை பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். என தோட்டக்கலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

🍁கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரியவரும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

🍁 இலங்கைக்கு  7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்படும் என இந்திய அரசு தகவல் . இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

🍁 இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் பாட்டிக்கு ஸ்பெயின் வீராங்கனை வீழ்த்தி இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார்.

Today's Headlines

🌸 In Chittoor near Villur at Madurai, the excavation team unearthed the 700 years old Iyyanaar statue and the victory stone.
🌸 All parents should participate in the SMC meeting on 20th March says Education Minister Anpil Mahesh.

🌸In Nilgiri, as the farmers are continuously growing vegetables, the soil is infected with nematodes or threadworms. So Agri officers have been advising farmers to do the crop rotation system.

🌸  Finance Minister Mr. Palanivel Rajan said that his 10 months work will be revealed during the release of the financial budget

🌸 7600 crore worth of goods will be provided to Sri Lanka by the Indian Government. A treaty of understanding was signed between the two countries.

🌸 Indian player Sainae advanced to the second round of the England open badminton series after beating the Spanish player.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment