Pages

Tuesday, February 15, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.02.22

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண் : 789

குறள்:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை


பொருள்:
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

பழமொழி :

When the mind is cool, the face will blossom
அகம் குளிர முகம் மலரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும் எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன். 

2. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர் எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

ஒருவர் கூட உங்கள் மீது அன்பு காட்டவில்லை என்றால் நீங்கள் மனிதர்களை வெறுக்கலாம் - சார்லி சாப்ளின்

பொது அறிவு :

1. இரண்டு தேசிய கொடிகளை உடைய நாடு எது? 

ஆப்கானிஸ்தான். 

2. தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது? 

நத்தை. 

3. தனது மூளையை எடுத்தாலும் உயிருடன் வாழும் விலங்கு எது? 

ஆமை.

English words & meanings :

Grating - காய்கறி, தேங்காய் துருவுதல், 

Whisk - beating eggs or cream fast, முட்டை வேகமாக அடித்தல்,

ஆரோக்ய வாழ்வு :

முருங்கைக்காய் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் ஏ இருப்பதால் பார்வைத்திறன் அதிகரிக்கும். நுரையீரல் தொடர்பானப் பிரச்சனைகளச் சரிசெய்யும். கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். சரும பிரச்சனைகளை சரி செய்யும். வறண்ட தொண்டை சரி செய்யும். வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கணினி யுகம் :

Quick access - Ctrl + 3. 

Quick clean - Ctrl + Alt + Q

பிப்ரவரி 16






தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalkeஏப்ரல் 301870 - பிப்ரவரி 161944இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

நீதிக்கதை 

தவளையும் சுண்டெலியும்

அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.

ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிக்கொண்டது. 

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம், தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோஷத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது. 

நீதி : நமக்கு தகுதியானவரை நண்பனாக ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது.

இன்றைய செய்திகள்

16.02.22

★இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் அனைவரும் பங்கேற்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அழைப்பு விடுத்துள்ளார்.

★சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

★மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் சட்டம் படிக்காதவர்களுக்கு சட்டப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கியதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

★இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022ல் 7 மாதங்களுக்கு பிறகு உச்ச அளவான 6.01 சதவீதத்தை எட்டியுள்ளது.

★போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

★நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

★இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.

Today's Headlines

 ★ The Chief Electoral Officer of Tamil Nadu has called on all to participate in the National Voter Awareness Competition conducted on behalf of the Election Commission of India.

 ★ The Chennai High Court has categorically stated that it will not allow the withdrawal of the restraining order on the Thimphu Hill Road passing through the Sathyamangalam Tiger Reserve.

 ★ The High Court has expressed dissatisfaction over the promotion of non-law students in the Madurai State Transport Corporation to the post of Legal Superintendent.

 ★ Retail inflation in India reached a seven-month high of 6.01 per cent in January 2022 amid rising prices.

 ★ The Central Government has advised Indians, especially Indian students, to leave Ukraine amid rising tensions.

 ★ Tamil Nadu boxers have won 3 gold and 1 silver medal in the international boxing tournament held in Nepal.

 ★ Australia won the 3rd T20 match against Sri Lanka and won the T20 series 3-0.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment