Pages

Monday, February 14, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.02.22

 திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண் : 795

குறள்:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்

பொருள்:
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

பழமொழி :

A journey of a thousand miles begins with a single step


ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும் எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன். 

2. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர் எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் - நேதாஜி

பொது அறிவு :

1. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்? 

தஞ்சை ஞானப்பிரகாசர். 

2. மனித உடலின் மிகவும் கடினமான பகுதி எது? 

பற்களின் எனாமல்.

English words & meanings :

Peel - remove the skin of vegetables or fruits, பழங்கள் காய்கறிகள் தோல் உரித்தல், 

slice - cut into pieces, துண்டாக்குதல்

ஆரோக்ய வாழ்வு :

பூண்டு இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் முக்கிய பங்கு உடையது. ஜீரணமின்மை ,ஜலதோஷம், காது வலி, வாயு தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத் தொல்லை, மூல நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.

கணினி யுகம் :

Redo - Ctrl + y. 

Remove term - Ctrl + Shift + up

பிப்ரவரி 15






கலீலியோ கலிலி (Galileo Galileiஇத்தாலிய ஒலிப்பில்கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564[3] – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர்கணிதவியலாளர்வானியல் வல்லுநர்பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை",[4] "நவீன இயற்பியலின் தந்தை",[5][6] "நவீன அறிவியலின் தந்தை"[7] என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

நீதிக்கதை

காகமும் நாய்க்குட்டியும்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள். அந்த நாய்க்குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது. அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம். 

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள் என்றது நாய்க்குட்டி. எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்! என்று சொன்னது காகம். உண்மைதான்! என்றது நாய்க் குட்டி.

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப்பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? 

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் என் இனத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி. அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம். திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி : ஒருவர் செய்கின்ற நல்ல செயல்களைவிட தீய செயல்களே முன்னிற்கும்.

இன்றைய செய்திகள்

15.02.22

★தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

★மருத்துவப் படிப்புகளில் சேர முதல் சுற்றில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் வரும் பிப்.18-ம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

★சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

★முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

★தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது அவசியம்: யூஜிசி முன்னாள் தலைவர் கருத்து.

★பிரான்சில் இருந்து கடைசி கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன.

★நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரையுள்ள 70 சதவீத சிறுவர்களுக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

★ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

★பெண்கள் கோப்பை டென்னிஸ்: தொடர்ச்சியாக 20 போட்டிகளை வென்று
எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கொன்டாவெய்ட் சாதனை.

Today's Headlines

 ★ History Professors of King Thirumalai Nayakkar College, Madurai discovered old post-Pandiyar inscription in the agricultural land of Nochchikulam village, Alangulam circle, Tenkasi district.

 ★ Students who have obtained admission orders in the first round to join the medical courses can join till next Feb.18, said the Director of Medical Education.

 ★ Muneeswar Nath Bandari has been appointed as the Chief Justice of the Chennai High Court.   The Governor of Tamil Nadu RN Ravi gave the oath of office .

 ★ The Director of Public Health has said that people can get cancer  treatment for cancer through the Chief Minister's Comprehensive Medicare Plan.

 ★ All states should resist NEET selection in the same way as Tamil Nadu : said Former UGC President Opinion.

 ★ The last phase of 3 Rafale fighter jets from France is coming to India next week.

 ★ 70 per cent of children between the ages of 15 and 18 in the country have been vaccinated with the first dose, said  the Union Health Minister.

 ★ The World Tennis Rankings for Men's Singles Players were released today.  Serbia's Novak Djokovic continues hold the top position in the list.

 ★ Women's Cup Tennis: Winning 20 matches in a row
 Contavite record from Estonia.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment