Pages

Tuesday, February 1, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைமாட்சி
குறள் எண் : 770
குறள்:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

பொருள்:
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.

பழமொழி :

Action speaks better than words


சொல்வதை காட்டிலும் செயலே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

பேராசைக்கும் லட்சியத்திற்கு
கொஞ்சம் தான் வித்தியாசம்.
முயற்சி இல்லாத கனவு பேராசை...
முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம்...
முயற்சி திருவினையாக்கும்..____சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பாரா பேட்மிட்டன் அகாடமி எங்கு அமைந்துள்ளது? 

லக்னோ, உத்திரப் பிரதேசம். 

2. ரஞ்சி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? 

கிரிக்கெட்.

English words & meanings :

Fill me in - give more details, இன்னும் விவரம் தேவை, 

no clue - no idea, என்ன என்று தெரியவில்லை 

ஆரோக்ய வாழ்வு :

நெல்லிக்காயுடன் 5 மிளகு, இரண்டு கிராம்பு இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை மஞ்சள், அனைத்தும் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கணினி யுகம் :

Ctrl + Down - Next Segment. 

Alt + Shift + Right - Next tag

பிப்ரவரி 2

தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் நினைவுநாள்




தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[3] சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடிகள் சொன்னார்

உலக சதுப்பு நில நாள்

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.[1]

உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன


நீதிக்கதை

ஏன் வந்தாய்?

அடர்ந்த காட்டில் ஓர் அத்தி மரம் இருந்தது. அந்த மரம் மிகவும் அடர்த்தியாயிருந்தது. அந்த மரத்திலிருந்த பொந்து ஒன்றில், நாகம் ஒன்று வசித்து வந்தது. மற்றொரு பொந்தில், கழுகு ஒன்று வசித்து வந்தது. இரண்டுமே, மிகவும் வயது முதிர்ந்தவை. வெளியே சென்று உணவை தேட முடியாத நிலை. அதனால், அம்மரத்தில் வசித்த மற்ற பறவைகள், தங்களுக்குக் கிடைத்த உணவில் சிறு பங்கை தினமும் கொடுத்து வந்தன.

அந்த பறவைகள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தன. ஒருநாள், பூனை ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அப்போது அம்மரத்திலிருந்த பறவைகளின் கூட்டிலிருந்து அப்பறவைக் குஞ்சுகளின், கீச் கீச் என்று சத்தம் கேட்டது. ஆகா! இங்கே நமக்கு நிறைய உணவு கிடைக்கும் போலிருக்கிறதே! என்று எண்ணியது பூனை. உடனே, மெது மெதுவாக மரத்தில் ஏறி, பறவை குஞ்சுகள் என்ன செய்கின்றன என்று பார்த்தது பூனை. பூனையை கண்ட அக்குஞ்சுகள் பயந்துபோய், சத்தமாக கூச்சலிட்டன.

ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? என்று கேட்டுக்கொண்டே கழுகு, தன் பொந்திலிருந்து எட்டிப் பார்த்தது. கழுகு மரத்தின் அருகில் பூனை வந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டது. என்னைப் பார்த்து இக்குஞ்சுகள் எல்லாம் இப்படி பயந்து கத்துகின்றனவே! நீங்களாவது தைரியம் சொல்லக் கூடாதா? என்று கேட்டுக்கொண்டே கழுகின் பக்கம் வந்து, வணக்கம் செய்தது பூனை.

நீ யார்? என்று கேட்டுக் கொண்டே, தன் கண்களை இடுக்கிக் கொண்டு அதைப் பார்த்தது கழுகு. நான் செவியன் என்னும் பூனை. உங்களிடமெல்லாம் நட்புகொள்ள வந்தேன் என்றது பூனை. ஓடு! ஓடு! இங்கு நிற்காதே! இல்லையேல், உன் உயிருக்கே ஆபத்து நேரும் என்று பயமுறுத்தியது கழுகு.

ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். என்னைப் பற்றி தெரிந்துகொண்டு பேசுங்கள். ஒருவனை பார்த்தவுடனேயே தீர்மானித்துவிடக் கூடாது. அவைகள் நடத்தையைப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்றது பூனை. நீ ஏன் இங்கு வந்தாய்... நட்புகொள்ள வந்தாயா? உண்மையைச் சொல்? என்று சற்று கோபத்துடன் கேட்டது கழுகு. நான், கங்கா நதியில் நாள்தோறும் குளித்துவிட்டு விரதம் இருந்து வருகிறேன். தாங்கள் மிகுந்த தர்மவான் என்று மற்ற பறவைகள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. வயது முதிர்ந்த சான்றோரிடமே தருமம் கேட்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், இப்போது உங்களைத் தேடி வந்தேன் என்றது அந்த பூனை.

அது சரி! நீ மாமிசப் பிரியனாயிற்றே! அதிலும், கொன்று சாப்பிட அஞ்சமாட்டாயே! என்றது கழுகு. அதுமாதிரியான செயல்களையெல்லாம் விட்டுவிட்டேன். நான் காட்டிலுள்ள காய், கனி, கிழங்குகளையே சாப்பிட்டு வருகிறேன் நான்! என்றது பூனை. கழுகுக்கு, அப்பூனையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. சரி, அப்படியென்றால் நீ இங்கு தங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டது கழுகு. பூனை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. நாளடைவில் அப்பூனை, அங்கிருந்த பறவைக் குஞ்சுகளை கொன்று சாப்பிடத் தொடங்கியது. 

என்ன இது! நாள்தோறும் நம் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே நம்முடைய கூட்டில்! என அந்தந்த பறவைகளும் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கின. இதையறிந்த பூனை, சில நாட்களில் அங்கிருந்து ஓடிப்போய்விட்டது. அதுகண்ட பறவைகள், அப்பூனை தங்கியிருந்த கழுகின் மரப்பொந்தை வந்து பார்த்தன. என்ன கொடுமை! அங்கு தம் குஞ்சுகளின் எலும்புகளும், சிறகுகளும் இருப்பதைக் கண்டன. கடுங்கோபம் கொண்டன. துரோகி! இந்தக் கழுகுதான் குஞ்சுகளையெல்லாம் கொன்று சாப்பிட்டு இருக்கிறது என்று கோபப்பட்டு, அப்பறவைகளனைத்தும், அக்கழுகின் மேல் பாய்ந்து கொத்திக் கொன்றன.

நீதி :
ஒருவனுடைய குணத்தைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் நட்பு கொள்ளக்கூடாது.

இன்றைய செய்திகள்

02.02.22

★அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களை இணையவழி பட்டப் படிப்பில் அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

★குடிமைப்பணிகள் முதல் நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு  பிப்.27-ம் தேதி நடைபெறும் என அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

★கடந்த 2019-ல் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, பிப்.15-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

★2022 - 23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

★அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை: ரஷ்யா.

★ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி.

★உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

Today's Headlines

 ★ Steps will be taken to enroll more  government school students in  online degree courses, said IIT Chennai Director V. Kamakodi after meeting Tamil Nadu Chief Minister Stalin.

 ★ All India Civil Services Training Center has announced that the entrance examination for the  First Level Civil Examination for free training will be held on February 27.

 ★ TNPSC has announced that the 3rd phase certificate verification and counselling for the Group-4 examination conducted in 2019 will be held on Feb.15.

 ★ Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the financial year 2022-23 yesterday.

 ★ Russia is not going to back down from the threat of US

 ★ ISL Football: Hyderabad beat North East United.

 ★ Djokovic and Ashley Party continue to top the world tennis singles rankings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment