Pages

Monday, January 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.22

  திருக்குறள் :

பால்: பொருட்பால், 

இயல்: படையியல், 

அதிகாரம்: படைமாட்சி, 

குறள் எண் :767: 

குறள்:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து. 

பொருள்:களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்

பழமொழி :

A wild goose never laid a tame egg


புலிக்கு பிறந்தது பூனையாகாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்

பொன்மொழி :

இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்._____அன்னை சாரதா தேவி


பொது அறிவு :

1. தேசிய ராணுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஜனவரி 15.

 2. விமானத்தில் உலகை வலம் வந்து சாதனை படைத்த முதல் பெண் யார்? 

ஸாரா ரூதர்ஃபோர்ட் .( பெல்ஜீயத்தை சேர்ந்தவர்)


English words & meanings :

Hang in - don't give up. முயற்சி கை விடாதே. 

Miss the boat - it's too late. வாய்ப்பை தவற விடுதல்

ஆரோக்ய வாழ்வு :

பூண்டு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காது வலி, வாயு தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, மூல நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.

கணினி யுகம் :

Ctrl + F6 - Next editor. 

Ctrl + F8 - Next perspective


பிப்ரவரி 1

கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள்





கல்பனா சாவ்லா (Kalpana Chawla17 மார்ச் 1962 - 1 பெப்ரவரி 2003) ஒரு இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.  இந்தியாவில் உள்ள[1] அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார். STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.

கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbiaநாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும். இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 121981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது. பெப்ரவரி 12003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.

நீதிக்கதை

வேலை கொடு

ஒருவன் தவம் செய்து இறைவனிடம் தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு இறைவன், நீ கேட்ட வரத்தைத் தருகிறேன். ஆனால், நீ அவனுக்குத் தொடர்ந்து ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் உன்னை விழுங்கி விடுவான்.. என்றார்.

அவனும் சரியென்று சம்மதித்தான். உடனே இறைவன் அவனுடன் ஒரு பூதத்தை அனுப்பி வைத்தார். பேராசை கொண்ட அவன், அந்தப் பூதத்திடம், எனக்கு இந்த நாட்டு அரசன் வசிப்பதை விடப் பெரிய அரண்மனை ஒன்று வேண்டும் என்றான். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அழகிய அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது பூதம். அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

மேலும் மேலும் அவன் ஆசைப்பட்டவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிவிட்டு, வேலை கொடு... வேலை கொடு... இல்லையென்றால் உன்னை விழுங்கி விடுவேன் என்று பூதம் அவனை மிரட்ட ஆரம்பித்தது. பூதத்துக்கு வேலை கொடுப்பதே அவனுக்கு வேலையாகிப் போய் விட்டது. அவனால் முடியாமல் போய் மிகவும் சோர்வடைந்து போனான்.

பூதம் அவனை விரட்ட ஆரம்பித்தது. மீண்டும் அவன் இறைவனிடம் ஓடினான். என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கதறினான். மனமிறங்கிய இறைவன், அவனை விரட்டி வந்த பூதத்திடம், நான் சொல்லும் வரை இந்தப் படிகளில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டு இரு என்று கட்டளையிட்டார்.

பூதமும் இறைவன் சொன்னபடி, படிகளில் விடாமல் ஏறி, இறங்கிக் கொண்டேயிருந்தது. பேராசைக்காரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணியபடி, இறைவனை வணங்கிவிட்டுச் சென்றான். அந்தப் பூதம் போலத்தான் நமது மனமும்.. நமது மனம் நமக்குத் தேவையானவற்றை அடைய வழியைக் காட்டும். பேராசைப்பட்டால் நம்மையே அழித்து விடும்.

நீதி :
பேராசை அழிவை தரும்.

இன்றைய செய்திகள்

01.02.22

★ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க வாளையாறு - எட்டிமடை இடையே ரயில் பாதையில் இரு இடங்களில் சுரங்க பாதை: அரசிடம் 16 பரிந்துரைகளை  மத்திய குழுவினர் அளித்துள்ளனர்.

★தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

★காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் பிப். 17-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

★நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

★ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

★கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார்.

★பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்தில் சீனா, ஜப்பான் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

★ஒடிசா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் உன்னதி ஹூடா சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

 ★ The Central Committee has submitted 16 recommendations to the Government: to build two tunnels on the railway line between Valayaru and Ettimadai to avoid the death of elephants in collisions with trains.

 ★ Preparations are underway for the 3rd phase of excavations in Sivakalai, Thoothukudi District.

 ★ In emphasizing 20-point demands including filling vacancies,  Transport workers are set to protest on 17th February in Chennai.

 ★ 75 years after the independence of our country, the freight train service has been launched for the first time in the state of Manipur. 

 ★ It has been reported that people in Afghanistan are forced to sell their kidneys due to poverty and hunger.  There has been a call to the World Bank to lift the embargo on Afghanistan.

 ★ Prime Minister Justin Trudeau went undercover with his family following growing protests in Canada against corona restrictions.

 ★ China and Japan advance to semifinals of Women's Asian Cup Football.

 ★ India's Unnati Hooda wins the Odisha Open badminton title at a young age and made an achievement.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment