Pages

Monday, November 8, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.11.21

  திருக்குறள் :

பால் :பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: தெரிந்து செயல் வகை. 

குறள் எண்: 467 

குறள்:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு. 

பொருள்:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

பழமொழி :

Ask and it shall be given


அழுத குழந்தை பசியாரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் ----- நேதாஜி

பொது அறிவு :

1. உலகின் ஆழமான குழி எது? 

பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ஆழ் குழி 

2. ஜப்பானின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது? 

ஒலஸ்கா

English words & meanings :

1. No room to swing a cat - not big enough, சிறிய இட‌ம் 


2. Rain cats and dogs - rain heavily. அதிகமான அளவில் மழை

ஆரோக்ய வாழ்வு :

வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்

முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இது உள்ளது. உடல் துன்பத்தையும் மனத் துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறது வைட்டமின் “சி”. இதனை நாம் ஆரஞ்சுசாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளது. இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்ச மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது.

நீரழிவு நோயாளிகள் ஊற வைத்த கொண்ட கடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும். முட்டை கோஸ் சூப், பாசிப் பருப்பு பாயாசம், முளை விட்ட பச்சபயிறு சாலட் இதிலும் வைட்டமின் “சி” அதிகமாக இருக்கிறது. தினமும் காலைசூப், ஆரஞ்சுஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

கணினி யுகம் :

Ctrl + ] - Increase selected font +1. 

Ctrl + shift + > - Increase selected font +1.

நவம்பர் 09

அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்... 




அப்துல் ரகுமான்,(நவம்பர் 91937 - சூன் 22017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 


கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்  




கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 271920; இறப்பு - புது தில்லிநவம்பர் 92005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.


அர்கோபிந்த் குரானா அவர்களின் நினைவுநாள்  





அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khoranaஇந்திहरगोविंद खुरानाசனவரி 91922 - நவம்பர் 92011) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் மரபு குறியீட்டின் பங்கு குறித்த ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க்இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர். 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது.

நீதிக்கதை

அதிசயக்குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். 

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டமளித்து வளர்த்தனர். 

அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும் மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சாணாக இருந்தது. 

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். 

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். 

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை என்றான். குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன் என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். 

குதிரைப்படைத் தலைவருக்கு நீண்ட தாடியுண்டு. குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். 

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப்படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் என்றான். 

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

09.11.21

★மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

★ஓய்வுபெற்ற பிறகும் விடுப்பு ஊதியம் பெறமுடியாமல் தவித்த ஊழியருக்கு வட்டியோடு சேர்த்து வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

★கர்காடக அணைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்.

★இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 33 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

★13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி.

★பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: 6-வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்.

★பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி.


Today's Headlines

 ★ As the water level of the Mettur Dam rises to 116 feet, it is expected to reach full capacity tomorrow. A 30 members team is formed to observe the condition of Dam. 

 ★ The High Court has ordered the Transport Corporation to pay the leave salary along with interest to a retired employee, who did not get it. 

 ★ Trichy District Collector has advised people who live near River Bank to move to safer places as there is a possibility of flood in Cauvery due to the opening of Karnataka dams.

 ★ In total, more than 33 lakh children in India are suffering from malnutrition.  Of these, more than 18 lakh children are severely malnourished, according to the Federal Ministry of Child Development.

 ★ Colombo Radio is resuming its broadcasting for Indian viewers after a big gap of 13 years.

 ★ Paris Masters International Tennis: Djokovic wins the title for the 6th time.

 ★ Women's Asian Cup Football: The Indian team goes on tour to Brazil.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment