Pages

Sunday, November 7, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 466

குறள்:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

பழமொழி :

An evil deed has a witness in the bosom


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

வெற்றிப் பெறுவது எளிது ,வாய்ப்புக்காக காத்திருக்காதீர்! உமக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - ---அப்துல் கலாம்

பொது அறிவு :

1. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது? 

சுதேசமித்திரன்.

 2."தங்கப் போர்வை நிலம் "என்றழைக்கப்படும் நாடு எது?

ஆஸ்திரேலியா.

English words & meanings :

Fat cat - a highly placed and paid person, உயர் பதவியில் அதிக சம்பளம் பெறும் மனிதர், 

let the cat out of the bag - reveal the secret, இரகசியம் வெளியிடுதல்

ஆரோக்ய வாழ்வு :

அதிமதுரம்






அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl+ Arrow right - Bring to forward , 

Ctrl + Arrow left - Send backward

நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்... 




வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747)இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில்  வந்தார். 


இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.11.21

★சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு.

★செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகள் திறப்பு: கனமழையால் ஏரிகள் நிரம்பி வருவதால் நடவடிக்கை.

★தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 175 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 

★தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


★தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை: மத்திய அரசு தகவல்.


★இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

★ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

★ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணிக்கு தமிழக வீரர் தேர்வு.

★ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 🌸 Chief Minister inspects heavy rain affected areas in Chennai.

 🌸Sembarambakkam and Puzhal lakes are opened as the level of water is rising due to heavy rains .

 🌸 Out of 909 lakes in Kanchipuram and Chengalpattu districts, 175 lakes are completely filled due to continuous rains.

 🌸 The Indian Meteorological Department has warned of heavy rains in the coastal areas of Tamil Nadu till November 11.


 🌸 No reduction in petrol and diesel taxes in 14 states including Tamil Nadu informed by Central Government 


 🌸 The federal government is in talks to seek recognition in various countries after the World Health Organization (WHO) approved the Covaccine, a vaccine made by Bharat Biotech, of  India against the corona virus.

 🌸 Corona coronary death toll rises again in Europe and Central Asia warned by World Health Organization .

 🌸 Tamil Nadu player selected for the Indian cricket team for the Junior World Cup.

 🌸 Hilo Open Badminton: India's Laksaya Sen advanced to the semifinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment