Pages

Tuesday, September 14, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.09.21

 திருக்குறள் :

அதிகாரம் 12 நடுவுநிலைமை 

குறள் எண்-114. 

 தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

பொருள்: ஒருவர் நேர்மையானவரா அல்லது நீதி தவறி ,நெறி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

பழமொழி :

A good when lost is valued most.


நிழலின் அருமை வெயிலுக்குப் போனால் தான் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

இளம் வயதில் நாம் நம் கடமையை சரியாகச் செய்வோம் எனில் முதுமையில் அதனால் கிட்டும் பலனை யாராலும் தடுக்க முடியாது.       -----------சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

1.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் பகுதி எது? 

கல்லீரல்.

2.பயோரியா நோயினால் பாதிக்கப்படும் உடல் பகுதி எது?

பற்கள்.

ஆரோக்ய வாழ்வு :

*முகம் பளிச்சிட சில டிப்ஸ்*

1)கற்றாழை: சருமத்தை குளிரூட்டும். சருமத் துளைகளை குறைப்பதால் எண்ணெய் சுரப்பது குறையும். கற்றாழை கூழ் எடுத்து சிறிது நேரம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

2)எலுமிச்சை: வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி

3)தக்காளி: இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெயை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

கணினி யுகம் :

Ctrl +z -- undo .

Ctrl + K-- insert hyperlink.


செப்டம்பர் 15:

மறைமலை அடிகள் அவர்களின் நினைவுநாள்  




மறைமலை அடிகள் (சூலை 151876 - செப்டம்பர் 151950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்


நீதிக்கதை

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. 
அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. 
தன் ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று.  அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். 

அதற்கு குரங்கோ,"மயிலே!இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 
ஆனால் அந்த குயிலை பார்.  தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்திவிட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு " என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது.
அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: உங்கள் திறமையை பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

இன்றைய செய்திகள்

15.09.21

📃 ஒடிசாவில் கனமழையால் வலுவிழந்த பாலத்தை கடந்து சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது.                     
📃 மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஊழியர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், அதிபர் விளாடிமிர் புடின் தனிமைப்படுத்தி கொண்டார்   .                  

📃 சென்னை: ‛‛நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.               

📃 சென்னை: ‛‛தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

📃 ஐ.சி.சி. மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதம் சிறந்த வீரராக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

 ️⃣ A freight train derailed crossing a bridge weakened by heavy rains in Odisha.  *                   
 ️⃣ MOSCOW: President Vladimir Putin had isolated himself after corona was confirmed to Kremlin, Staff in the Russian presidential palace.        

 ️⃣ Chennai: There will be heavy rain in one or two places in the Nilgiris district, '' said Puviarasan, director of the Chennai Meteorological Center.  

 ️⃣ Chennai: A mega vaccination camp will be held in Tamil Nadu on the 17th, '' said the Minister of People's Welfare Ma Subramanian.

 ️⃣  Each month,  the best players are selected and awarded by ICC. England captain Joe Root has been named the best player in men's cricket in August.


Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment