Pages

Monday, September 13, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.09.21

 திருக்குறள் :

அதிகாரம்- 27 தவம் 

குறள் : 

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 

அற்றே தவத்திற் குரு. 

பொருள்: எதையும் தாங்கும் இதயத்தை பெற்றிருப்பதும் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும் தான் தவம் என்று கூறப்படும்.

பழமொழி :

There is no substitute for hardwork.

கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

வார்த்தையாலும் பிறரை நாம் துன்புறுத்தக்கூடாது. துன்புறுத்தும் செயல்களை கடந்து செல்வதே சிறப்பு------ சாரதா தேவி

பொது அறிவு :

1.இந்தியாவில் முதன் முதலில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது? 

1927.

2. மனித மூளையின் சாராசரி எடை எவ்வளவு? 

1.36 Kg

English words & meanings :

Heart's content - as much as you want

Zip your lip - stop talking or don't talk much

ஆரோக்ய வாழ்வு :

1)பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. 

2)உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு

3)புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது

4)வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது

5)கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.

கணினி யுகம் :

Ctrl + O -- Open options.

Ctrl + F -- Open find box.


செப்டம்பர் 14 :

ஜான் கால்டுவெல் ஹோல்ட் அவர்களின் நினைவுநாள்  






ஜான் கால்டுவெல் ஹோல்ட் (ஏப்ரல் 14, 1923 - செப்டம்பர் 14, 1985) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கல்வியாளர், வீட்டுக்கல்வியின் ஆதரவாளரான இவர் இளைஞர்களின் உரிமை கோட்பாடுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்தார்


நீதிக்கதை

தமிழ் கதைகள் - சிறுவர் கதைகள்
 
கைமேல் பலன் கிடைத்தது 

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

13.09.21

★9மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

★அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

★நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

★நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார்.

★நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

★ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1  என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோலை வீழ்த்தியது.

Today's Headlines


★ State Election Commission has announced the date of local elections for 9 districts.  Accordingly, voting is scheduled to take place in two phases on October 6 and 9.

 ★ The quota for women in government jobs will be increased to 40 percent, said the Minister of Finance and Human Resource Management of Tamil Nadu.

 ★ The new bill to exempt the NEET examination was passed in the Tamil Nadu Legislative Assembly yesterday.

 ★ India's economic growth is expected to increase by 10 per cent in the current financial year, said Poonam Gupta, Director General, NCAER, Center for Economic Research.

 ★ Daniel Medvedev of Russia won the men's singles title at the US Open tennis tournament in New York.

 ★ Atletico Madrid beat Espanyol 2-1 in La Liga in Spain.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment