Pages

Sunday, March 1, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.03.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

விளக்கம்:

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

பழமொழி

Better to bend than to break.

  உடைந்து போவதை விட வளைந்து கொடுப்பது நல்லது.
 
இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

பாட புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்கும் போது புத்தகத்தின் பக்கங்கள், பறவை சிறகை விரித்து உயரே பறப்பது போல, உங்களின் அறிவை விரிவடைய செய்து உங்களின் வாழ்க்கையை உயர்த்தும்.

_____இறையன்பு

பொது அறிவு

1.தமிழக தோட்டப் பயிர்களின் பூமி "என்றழைக்கப்படும் மாவட்டம் எது?

தருமபுரி.

2."தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து" என்றழைக்கப்படும் இடம் எது?

தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்)

English words & meanings

False - not true. உண்மையற்ற.

Falls - to drop down towards the ground. நிலம் நோக்கி விழுதல்

ஆரோக்ய வாழ்வு

கொத்தமல்லி விதையை கசாயம் வைத்து குடித்தால் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று நீங்குகிறது. வாயில் ஏற்படும் குமட்டல் மறைந்து போகிறது. இது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்கிறது. வயதானவர்கள் இதனைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் பார்வைக் குறைபாடுகள் தடுக்கப்படும்.

Some important  abbreviations for students

 Wi-Fi - Wireless fidelity

GOOGLE - Global Organization Of Oriented Group Language Of Earth

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்

போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்?

நானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான். உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

நீதி :
தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

02.03.20

★பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 8.35 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.

★தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொடர்பான முழு அறிக்கையை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

★நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடத்தில் பெங்களூருவும், இரண்டாம் இடத்தில் சென்னையும் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

★ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப் சி அணி  4-1 என்ற கோல் கணக்கில், எஃப்சி கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

★மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.

Today's Headlines

🌸The public exam for the Plus 2 class begins from tomorrow.  8.35 lakh students across the state are going to write the exam.

 🌸The Central Government has handed over the full report on the excavation work at Adichchanallur in Thoothukudi district to the Indian Archaeological Survey Department .  Minister of Tamil Official Language and Tamil Culture Mr. Pandiyarajan said that the survey report will be released soon.

 🌸A recent study reveals that Bangalore holds the number one place in digital currency exchange  and Chennai in the second place.

 🌸Chennai FC beat FC Goa 4-1 in the first semifinal match of the ISL football tournament

 🌸 Spanish player Rafael Nadal qualifies for the final round of the Mexico Open tennis.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment