Pages

Friday, January 31, 2020

MICE TEST - 01.02.20

மைத்துளி வணக்கம்

Thursday, January 30, 2020

MICE TEST - January 2020

 அன்பர்களுக்கு வணக்கம்....
            நமது தினசரி தேர்விற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்..... இம்மாதம் முழுவதும் வந்த தேர்வில் இருந்து சில கேள்விகளை தொகுத்து இம்மாதத்திற்கான தேர்வினை தயாரித்து உள்ளோம்.... இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிக்கே பரிசுகள் அனுபபி வைக்கப்படும்..... மாணவ செல்வங்களே தயாரா...... !!!!


இன்றைய மாதத்தேர்வில் பங்கு பெற கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfschk_PxV4IKWb9OpyXMSozaF1a7-72ZrSdeir44KEP87C8A/viewform?usp=sf_link

_________________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. a) ஜனவரி 29
2. c) ஈட்டி எறிதல் ( 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்)
3. b) பெங்கால் கெஜட்
4. d) கர்நாடகா
5.  c)  பங்கஜ் அத்வானி

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N. ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்.

2. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
3. P. தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. B. லக்‌ஷனஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. K.விஷாலினி, 8-ஆம் வகுப்பு
6. D.நோயல்சோனா, 8-ஆம் வகுப்பு
7. R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
8. A.லட்சுமி வாசினி, 8-ஆம் வகுப்பு
9. A.ஹரிபிரியா, 9-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்......

10. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
   St. சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி, திருச்சி

பல நாட்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ள எம் அரசுப் பள்ளி மாணவர் ஷிஹாப்பிற்கும் , தொடர்ந்து வெற்றி பெற்று வரும் 5-ஆம் வகுப்பு சுட்டி தமன்னாவிற்கும் சிறப்பு பாரட்டுகள்.......... திருச்சியின் சாதனை மாணவிகளுக்கு வாழ்த்துகள்......



Wednesday, January 29, 2020

MICE TEST - 30.01.20

மைத்துளி வணக்கம்

Tuesday, January 28, 2020

MICE TEST - 29.01.20

 மைத்துளி வணக்கம்

Monday, January 27, 2020

MICE TEST - 28.01.20

மைத்துளி வணக்கம்

Sunday, January 26, 2020

MICE TEST - 27 01.20

மைத்துளி வணக்கம்

Saturday, January 25, 2020

MICE TEST - 26.01.20

மைத்துளி வணக்கம்

Friday, January 24, 2020

MICE TEST - 25.01.20

மைத்துளி வணக்கம்

Thursday, January 23, 2020

MICE TEST - 24.01.20

மைத்துளி வணக்கம்

Wednesday, January 22, 2020

MICE TEST - 23.01.20

மைத்துளி வணக்கம்

Tuesday, January 21, 2020

MICE TEST - 22.01.20

மைத்துளி வணக்கம்.
MICE TEST:47

1.டென்னிஸில் மொத்தம் 4 Grand Slam போட்டிகள் ஓராண்டில் நடைபெறும்.அதில் ஆண்டின் துவக்கமான ஜனவரியில் நடைபெறும் போட்டி எது?

a) AUSTRALIAN OPEN
b)US OPEN
c) FRENCH OPEN
d)WIMBLEDON

2்.நீர் சேமிப்பு,வன வள மேம்பாடு, தீய செயல்களை தடுத்தல் (வரதட்சணை,குழந்தை திருமணம்)ஆகியவற்றைப்பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகின் மிக நீளமான மனித சங்கிலியை(18034 கி்மீ நீளம்,5.16 கோடி மக்கள் பங்கேற்பு) நடத்திய மாநிலம் எது?

a) பீகார்
b) குஜராத்
c) ஒடிஸா
d) மே.வங்காளம்

3.இரவாடி டால்பின்கள்  காணப்படும் ஒரே இந்திய ஏரி எது?

a) சில்கா ஏரி
b) நைனிடால் ஏரி
c) சாங்கு ஏரி
d) தால் ஏரி

4.பின்வரும் எது,டாக்ஸி சேவை மற்றும் உணவு விநியோக வணிகம் சார்ந்த நிறுவனம்?

a) Somata
 b) Uber
c)Swisky
d)Amazon

5.தமிழக முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 காவல் நிலையங்களில் எது முதலிடத்தில் உள்ளது?

a) கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்

b)திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம்

 c) தர்மபுரி நகர காவல் நிலையம்

d) திருப்பூர் நகர காவல் நிலையம்

6.Jeff Bezos என்பவர் எந்த  நிறுவனத்தின் CEO ?

a) Apple
b)Infosys
c)Amazon
d)microsoft

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய விடைகள்

1. d)நேபாளம்
2.b) இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது.
3.b) தீபிகா படுகோன்
4.a) ஹாக்கி
5.b) BIOCON

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.M.ஆனந்தன், 12 ஆம் வகுப்பு
    Akkv Aarunadu matric higher secondary school, திருச்சி

2. M.செல்வபாரதி, 8- ஆம் வகுப்பு
3. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
4. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
5. B.லக்‌ஷனா ஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
6. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு

அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

Monday, January 20, 2020

MICE TEST - 21.01.20

மைத்துளி வணக்கம்.

Sunday, January 19, 2020

MICE TEST - 20.01.20

மைத்துளி வணக்கம்

Monday, January 13, 2020

MICE TEST - 14.01.20

மைத்துளி வணக்கம்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.01.20

 அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்...

Sunday, January 12, 2020

MICE TEST - 13.01.20

மைத்துளி வணக்கம்

Saturday, January 11, 2020

MICE TEST - 12.01.20

மைத்துளி வணக்கம்.
MICE TEST:40

1.விளையாட்டுத் துறையில் உயரிய விருதான LAUREUS  AWARD  ஆகும்.
இந்த ஆண்டு Laureus award பட்டியலில்  இடம் பெற்றுள்ள இந்திய வீரர் யார்?

a) கபில் தேவ்
b) சச்சின்
c) அபினவ் பிந்த்ரா
d)சானியா மிர்ஸா

2.மறைந்த காபூஸ் பின் சையத்,நவீன அரபு உலகில் நீண்ட நாட்களாக எந்த நாட்டு மன்னராக இருந்தவர்?

a) குவைத்
b) ஓமன்
c) ஈரான்
d)துபாய்

3.ராஜா ஜான் உர்புதூர் சாரி(41) என்பவர் பின்வரும் எந்த விண்வெளி  மையத்திலிருந்து விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆவார்?

a) CNSA
 b)NASA
 c) ISRO
d) SUPARCO

4.பின்வரும் தகவல்களில் எது தவறு?

a)  சித்தானந்தா மூர்த்தி கன்னட அறிஞர் ஆவார்.
 b) இந்திய -ஜப்பான் கடலோர காவல் படையினர் சென்னையில் பயிற்சி.
c) மாடு பிடி வீரர் களின் வயது வரம்பு 21
d) திருவையாற்றில் 173ஆவது தியாகராஜர் ஆராதனை விழா ஆரம்பம்


5. பின்வரும்  எந்த ஒன்று, புத்தகம் சார்ந்தது?

a) UPASI
b) BAPASI
c) FEFSI
d) PEPSI


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

வணக்கம்.....
நேற்றைய தேர்வின் விடைகள்

1. d) சச்சின், லாரா (WI(
2. d) மருத்துவம்
3. b) ஆரஞ்சு
4. d) K.J.ஜேசுதாஸ்
5. c) 70

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்....

1. M.செல்வபாரதி - 8ஆம் வகுப்பு
2. D.ரம்யாம்பிகை - 8ஆம் வகுப்பு
3. சந்தியா ஜோசப்பின் - 8 ஆம் வகுப்பு
4. P.தனுஷியா - 8ஆம் வகுப்பு
5. R.தீபிகா - 8 ஆம் வகுப்பு

இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்... அனைவருக்கும்  வாழ்த்துகள்......




Friday, January 10, 2020

MICE TEST - 11.01.20

மைத்துளி வணக்கம்.

MICE TEST:39

1.ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து, 11000 ரன்களை எடுத்து சாதனை புரிந்தவர்கள் 6 பேர்.
அந்த 6 பேர்களில்  பின்வரும் எந்த இருவர் இல்லை?

a)ரிக்கி பாண்டிங்,அலன் பார்டர்(AUS)

b) கிரேமி சுமித்(SA),ஸ்டீபன் ப்ளமிங்(NZ)

c) டோனி,விராட் கோலி

d) சச்சின்,லாரா(WI)

2.Har Gobind Khorana 1968 ல் எந்த துறைக்காக நோபல் பரிசு பெற்றார்?

a)இயற்பியல்
 b) கணிதம்
c) வேதியியல்
d)மருத்துவம்

3.விமானங்களில் உள்ள BLACK BOX ன் நிறம் என்ன?

a) பச்சை
b) ஆரஞ்ச்
c) மஞ்சள்
 d) கருப்பு

4. 80 ஆயிரம் பாடல்களைப் பாடியவரும், நேற்று தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியவருமான பிரபல பாடகர் யார்?

a) லதா மங்கேஷ்கர்
b) SPB
c) ஆஷா போன்ஸ்லே
d)K.J.யேசுதாஸ்

5.டெல்லியின் சட்ட மன்ற தொகுதிகள் எத்தனை?

a) 50     b) 60     c) 70     d)80

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

_____________________________________________________________________________

வணக்கம்.....
நேற்றைய விடைகள்

1. c (சியாச்சின்)
2. c (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்)
3. b (அஸ்ஸாம்)
4. a (சக்திவேல்)
5. d (60 இட்சம்)

நேற்று சரியான விடையினை அனுப்பியவர்

1. சந்தியா ஜோசப்பின்
    8 - ஆம் வகுப்பு
    ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

வாழ்த்துகள் சந்தியா.....

பங்கு பெற்ற அத்துணை மாணவர்களுக்கும் வாழ்த்துகள்..... அனைவருமே ஒருவிடை மாத்திரமே தவறு.... எனவே இன்னும் சற்று பொறுமையுடன் தேடுங்கள்..... 

Thursday, January 9, 2020

MICE TEST - 10.01.20

மைத்துளி. வணக்கம்.
  MICE TEST:38
1.உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் பனி சிகரம் எது?
a) எவரெஸ்ட்
b) டிராஸ்
c) சியாச்சின்
d)கிளிமஞ்சாரோ


2. இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம்(optical cable fibre)பதிக்கும் பணியை BSNL நிறுவனம் சென்னை மற்றும் எந்த தீவுகளுக்கு இடையே துவங்கியுள்ளது?
 a) லட்சத்தீவு
 b) மடகாஸ்கர் தீவு
c) அந்தமான நிக்கோபர் தீவு
d) ராமேஸ்
வரத்தின்
குருசேடை தீவு


3.மத்திய அரசின் சார்பில் இளம் விளையாட்டு  நட்சத்திரங்களைக் கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் Khelo games,இந்த ஆண்டு எங்கு நடைபெறுகிறது?

a) மணிப்பூர்
 b) அஸ்ஸாம்
c) மேகாலயா
d) டெல்லி


4. AEPC(Apparel Export Promotion Councli_ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்)  ன் தலைவராக தேர்வாகியுள்ளவர் யார்?
a) சக்திவேல்
 b) வசந்த்
 c) ராமராஜ்
d) சரவணா செல்வ ரத்தினம்


5.ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை ........லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி அழிந்துள்ளது.
a) 40.  b) 50   c) 20.  d)60


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link


_________________________________________________________________________________

வணக்கம்.....

நேற்றைய விடைகள்

1. b ) Assam
2. c ) மேலத்திருப்பத்தியூர்
3. b) பளு தூக்குதல்
4. b ) உக்ரைன்
5. b ) INS Vikranth
6. d ) மணல் சிற்ப கலைஞர்
7. d ) கோவனூர்


நேற்று சரியாக விடையளித்தவர்கள்

1. P. தனுஷ்யா - 8 ஆம் வகுப்பு
2. ஆதிரை  - 8 ஆம் வகுப்பு
3.  K.J.ஹேமஸ்ரீ - 8 ஆம் வகுப்பு
4. S. ரூபா தரணி - 8 ஆம் வகுப்பு

இந்நால்வரும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.....  மாணவர்களே நீங்கள் இணையத்தில் விடைகளைத் தேடுவீர்களானால் உங்களுக்கு ஒரு சின்ன tips.....  கேள்வியினை அப்படியே முழுவதுமாக தட்டச்சு செய்து தேட வேண்டாம் . முதலில் உங்களின் குறிப்பேடு ( note ) மற்றும் பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்வியிலும் உள்ள முக்கியமான வார்த்தையினை ( key word) எண் வரிசைப்படி குறிப்பேட்டில் எழுதிகொள்ளுங்கள். உதாரணத்திற்கு நேற்றைய கேள்விகளில்  இருந்த key words  1. Manas national park   2. தென்னிந்திய தூய்மையான நகரம்   3. சரப்ஜீத் கவுர் ஊக்கமருந்து   4.  bread basket of Europe   5.  முதல் விமானம் தாங்கி கப்பல்   6. சுதர்ஸ்ன் பட் நாயக்   7. இந்த கேள்விக்கு விடைகள்தான் key word.... எனவே இணையத்தில் தேடும்போது இம்மாதிரி key words கொண்டு தேடும்போது விரைவாகவும், சரியாகவும் விடைகளை கண்டறிய முடியும்.   கண்டறிந்த விடைகளை உங்கள் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு பின்பு அந்த link ல் சென்று விடைகளை பதிவு செய்யலாம்.பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.....

Wednesday, January 8, 2020

MICE Test - 09.01.20

மைத்துளி.வணக்கம்

MICE TEST:37

1.Manas National Park உள்ள மாநிலம் எது?

a) Sikkim
b) Assam
c) HP
d)Arunachala Pradesh

2..தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ள  தமிழகத்தின்  ஊர் எது?

a)மேலப்பாளையம்
b)மேல் மலையனூர் c)மேலத்திருப்பருத்தியூர்
d) திருப்பத்தூர்

3.ஊக்க மருந்து உட்கொண்டதால் 4ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட இந்தியாவின் சரப்ஜீத் கவுர்,எந்த விளையாட்டு வீராங்கனை?

a) தடகள ஓட்டம்
b) பளு தூக்குதல்
c) மல்யுத்தம்
d)நீச்சல்

4.Bread basket of Europe என்றழைக்கப்படும் நாடு எது?

a)போலந்து
b) உக்ரைன்
c) ஜெர்மனி
d)ஐயர்லாந்து

5.இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுவரும்
 முதல் விமானம் தாங்கிக் கப்பல் எது?
a) INS Dhanush
b)INS vikranth
c) INS Arjun
d))INS Agni

6.ஒடிஸாவைச் சேர்ந்த சுதர்ஸன் பட் நாய்க் என்பவர் புகழ்பெற்ற.......... கலைஞர் ஆவார்.
a) வன புகைப்பட
b) நாடக
 c) புல்லாங் குழல் இசை
d) மணல் சிற்ப

7.கீழே உள்ள இடங்களில் எங்கு அகழ்வாராய்ச்சி நடைபெறவில்லை?

a) அழகன் குளம்
b) கீழடி
c)ஆதிச்சநல்லூர்
d)கோவானூர்

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

_____________________________________________

வணக்கம்.....
   நேற்றைய தேர்வின் விடைகள்

1. b - டெஸ்ஸி தாமஸ்
2. a - UP
3. c - தேர்தல்
4. c -  பீகார்
5. a - விராட் கோலி

சரியான விடையினை அனுப்பியவர்

1. நித்தீஷ் பிரபு
7-ஆம் வகுப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி
காங்கேயம்பாளையம்
கோயம்புத்தூர்

2. E.ஷைனி ஜெனிவா
    8-ஆம் வகுப்பு
    ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
   திருச்சி

வாழ்த்துகள் அன்பு மாணவர்களே....


நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பதிவுகள் வரப்பெற்றன. அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்..... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.... நன்றி

Tuesday, January 7, 2020

MICE test - 08.01.20

மைத்துளி. வணக்கம்.

MICE TEST:36

1.இந்தியாவின் "ஏவுகணைப் பெண்மணி" என அழைக்கப்படுபவர் யார்?
a) முத்தையா வனிதா
 b) டெஸ்ஸி தாமஸ்
c) ரித்து கரிதால்
d)அனுராதா சர்மா

2.காச நோயாளிகள் அதிகமாக (4.70லட்சம்)உள்ள மாநிலம் எது?

a) UP b)MP c)TN d)KN

3.சுனில் அரோரா என்பவர்,இந்தியாவின் தலைமை..............ஆணையர் ஆவார்.

a) ஊழல் தடுப்பு
b) மனித உரிமைகள்
 c) தேர்தல்
d)ஒலிம்பிக் குழு

4.நாட்டிலேயே முதன்முதலாக நன்னீர் வாழ் ஆமைகள் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ள மாநிலம் எது?

a)HP
b) ஒடிஸா
 c) பீகார்
d)குஜராத்

5.சர்வதேச T 20  கிரிக்கெட்டில் அதிக ரன்களை(2663) எடுத்து முதலிடத்தில் உள்ளவர் யார்?

a) விராட் கோலி
b) ரோகித் சர்மா
 c) ஷிகர் தவான்
d) எம்.எஸ்.தோனி

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

____________________________________________

வணக்கம் நேற்றைய போட்டியின் விடைகள் ....

1. b - ஜனவரி 4
2. a -  நாக்பூர்
3. a -  1917
4. d - இராமநாதபுரம்
5. c -  ரோஜர் பெடரர் -  ஸ்வீடன் தவறானது ( பெடரர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர்)

நேற்று சரியாக விடையளித்த மாணவர்கள்...

1. K.J.ஹேமஸ்ரீ
    8-ஆம் வகுப்பு
    ஹோலி கிராஸ் பெண்கள்       மேல்நிலைப்பள்ளி, திருச்சி.


வாழ்த்துகள் மாணவ செல்லங்களே

முக்கிய தகவல் : நேற்றைய போட்டியில் அதிகம் பங்கேற்றது அரசுப் பள்ளி மாணவர்களே..... அவர்களுக்கும் பாராட்டுகள்..... தினமும் முயற்சி செய்யுங்கள் எம் மாணவர்களே ... வானமும் தொட்டுவிடும் தூரம்தான்....

Monday, January 6, 2020

MICE TEST - 07.01.20

மைத்துளி வணக்கம்.

MICE TEST:35

1.உலக ப்ரெய்லி தினம்(World Braille Day) எப்பொழுது?
a) ஜனவரி6
b)ஜனவரி.4
c) ஜனவரி.7
d)ஜனவரி

2.NDRF(National Disaster Response Force) யின் Academy எந்த நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
a) நாக்பூர்
b) டெஹராடன்
c) முசௌரி
d)சென்னை

3.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றதிரை படம் எது?
a) 1917
 b) Parasite
c) Joker
 d) marriage story

4.மூக்கையூர் மீன் பிடி துறைமுகம் மற்றும் குந்துக்கல் மீன் பிடி துறைமுகம் உள்ள மாவட்டம் எது?
a)கன்னியாகுமரி
b) தூத்துக்குடி
c) கடலூர்
d)ராமநாதபுரம்

5.பின்வரும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் அவர்களது நாடுகள் பட்டியலில்  எது தவறான பொருத்தம்?
a) ரபேல் நடால்-- ஸ்பெயின்
  b) நோவக் ஜோகோவிச்-- செர்ரபியா
c) ரோஜர் பெடரர்- _ ஸ்வீடன்
 d)ஆஷ்லி பார்டி- ஆஸ்திரேலியா

_____________________________________________

வணக்கம்,
         நேற்றைய சரியான விடை

1. a குஜராத்
2. d மேலே உள்ள அனைவரும்
3. c மருத்துவக் கல்லூரிகள்
4. a வாரணாசி
5. b ஈரான்

சரியாக பதிலளித்தவர்

P.தனுஷியா
8 - ஆம்  வகுப்பு
ஹோலி கிராஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி,
தெப்பக்குளம்,
திருச்சி

வாழ்த்துகள் தனுஷியா

_____________________________________________

நேற்று ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்...... Comment box - ல் எவ்வாறு பதிவு செய்வது என்கிற குழப்பத்தினால் நிறைய பேர் விடைகளை அனுப்பவில்லை எனக் கூறினர்.... எனவே இன்று முதல் Google form link அனுப்பபடும். அதில் பதிவு செய்வது எளிதாக இருக்கும். முதலில் விடைகளை கண்டுபிடித்தப் பிறகு இந்த link ஐ open செய்து அதில் விடைகளை பதிவிடுங்கள்... நன்றி....


விடைகள் பதிவிட வேண்டிய link

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

( தங்களின் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.... தொடர்பு கொள்ள வேண்டிய எண் 8870986722)

Art - 41

கலையும் கைவண்ணமும்
Covai women ICT_போதிமரம்

Click here to see the ART video

Sunday, January 5, 2020

MICE TEST - 06.01.20

மைத்துளி வணக்கம்.

MICE.TEST:34

1.சர்வதேச பட்டம் விடும் திருவிழா,(ஜன,7-14 வரை) நடைபெறும் இடம் எது?

a)குஜராத்
 b) கோவா
 c) மணிப்பூர்
 d) தெலுங்கானா

2.ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையாளர் யார்?
a) ரவி சாஸ்திரி(IND)
b) யுவராஜ் சிங்(Ind)
c) லியோ கார்டர்(NZ)
d) மேலே உள்ள அனைவரும்

3.அரியலூர்,காஞ்சீபுரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய இடங்களில் ........நிறுவ மத்திய அரசு அனுமதித்துள்ளது.


a) உயர் நீதிமன்றம்
b) அணுமின் நிலையங்கள்
c) மருத்துவ கல்லூரிகள்
 d)சட்டக் கல்லூரிகள்

4.சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்(RIIR) உள்ள இடம் எது?
a) வாரணாசி
b) கோவை
c) பெங்களுரூ d)ஹைதராபாத்

5.Tehran என்பது எதன் தலைநகரம்?
a) ஈராக்
b) ஈரான்
c) நைஜீரியா
d) சிரியா

மீண்டும் ஒரு நினைவூட்டல்

* ஆசிரியர்கள் இத்தேர்வினை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். செய்திதாளில் இருந்து விடையை கண்டறிய சொல்லுங்கள். 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிககும் மாணவ, மாணவியர் இதில் கலந்து கொள்ளலாம்.

* கண்டறிந்த விடைகளை இதே பக்கத்தில் கீழே comment பகுதியில் தங்களது பெயர், வகுப்பு, பள்ளியுடன் பதிவிட வேண்டும்.

* அடுத்த நாள் கேள்விகளுடன் முந்தைய நாள் விடைகளும், சரியாக பதிலளித்த 10 மாணவர்களின் பெயர்களும் பதிவிடப்படும்.

* மாத இறுதியில் அனைத்து கேள்விகளையும் தொகுத்து ஒரு தேர்வு வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் 10 மாணவர்களுக்கு பரிசுகள் அனுபபி வைக்கப்படும்.

தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கும்

Covai women ICT_போதிமரம்

Saturday, January 4, 2020

புத்தாண்டில் புதிய பகுதி - ஓர் அறிமுகம்

           அன்புடைய ஆசிரிய சமூகத்துக்கும், மாணவ செல்வங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்புத்தாண்டு முதல் புதிய பகுதி ஒன்று நம் வலைபூவில் அறிமுகமாக உள்ளது. அப்பகுதியை நமக்கு வழங்க இருக்கின்றவரைப் பற்றிய ஓர் அறிமுகம் இதோ......

          ஆனைமலை ஒன்றியத்தில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து, நடுநிலைபபள்ளி தலைமை ஆசிரியராக  உயர்ந்து, தற்போது கூடலூர் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர்தான் திரு.மு.ஸ்ரீவெள்ளிங்கிரி ஐயா அவர்கள்.  இவரது துணைவியார் திருமதி.K.R.மைதிலி அவர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்.

          15.10.2004ல் ஆரம்பிக்கப்பட்ட தங்களின் மைத்துளி கல்வி அறக்கட்டளை மூலம் மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு குறுவள மைய கூட்டத்தின் போது ஆசிரியர்களுக்கும், மாதந்தோறும் மாணவர்களுக்கும் பொது அறிவுத் தேர்வு வைத்து பரிசுகள் வழங்கி வாசிப்பை ஊக்கபடுத்தி வந்தனர். பிறகு மைத்துளி என்ற பெயரில் பொதுஅறிவு செய்திகளை புத்தக வடிவில் வெளியிட்டு வந்தனர்.


       
         தற்போது நாள்தோறும்  அலைபேசி மூலம் MICE TEST நடத்தி வருகின்றனர்.

      MICE  -  Measuring the Intelligence in Current Events 


      இதன் நோக்கம்


  •       நாளும் நாளிதழ் படிப்போம்!        ஞாலம் அறிந்திடத் துடிப்போம்!!
             என்ற நோக்கில் அனைவரையும் நாளிதழ் படிக்கத் தூண்டுவது, மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை அங்கீகாரம் செய்வது .


         தினமலரின் லட்சிய ஆசிரியர் விருது (2013) மற்றும் BOLT விருதும் இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



       இவரது  MICE தேர்வினை நமது வலைபூவில் தினமும் பதிவேற்ற ஒப்புக்கொண்ட ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


  •        தினமும் காலை 9 மணிக்குள் கேள்விகள் (5/6 கேள்விகள்) நமது வலைப்பூவில் பதிவேற்றப்பட்டு அதன் link அனுப்பப்படும்.  6 - 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதற்கான விடையினை comment பகுதியில் பதிவேற்ற வேண்டும். தங்களின் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
  • விடைகள் அடுத்த நாள் காலை பதிவேற்றப்படும். அதனுடன் சரியாக விடையளித்த 10 மாணவர்களின்  பெயரும் பதிவு செய்யப்படும்.
  • மாத இறுதியில் அம்மாதம் முழுவதும் நடந்த தேர்வுகளை தொகுத்து google form-ல் ஒரு தேர்வு வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களில் 10 பேருக்கு எமது Covai women ICT மூலம் பரிசுகள் அனுப்பி வைக்க இருக்கின்றோம்.
  • இதில் ஆசிரியர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இக்கேள்விகளை தினமும் மாணவர்களிடம் கொண்டு செல்லுங்கள். செய்திதாள்களை வாசிக்க ஊக்குவியுங்கள். முடிந்த அளவு மாணவர்களையே விடைகளை கண்டறிய வாய்ப்பளிக்கலாம். 
           ஆசிரிய நண்பர்களே நம் மாணவர்கள் போட்டித்தேர்வினை எதிர்கொள்ள இவை உறுதுணையாக அமையும் என்ற எண்ணத்தில் இதனை ஆரம்பிக்கிறோம். தங்களின் மேலான ஆதரவினை வழங்கி நம் மாணவர்களின் உயர்விற்கு உதவுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.



                                                                                                                        நன்றி
                                                                                                              Covai women ICT